பிரதி பதவிநிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் துமிந்த சிரிநாக பதவியேற்பு

2nd October 2020

இலங்கை இராணுவத்தின் மின்சாரம் மற்றும் இயந்திர பொறியிலாளர் படையின் மேஜர் ஜெனரல் துமிந்த சிரிநாக அவர்கள் 01ம் திகதி வியாழக்கிழமை புதிய பிரதி பதவிநிலை பிரதானியாக கடமையேற்றுக் கொண்டார்.

மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் உத்தியோக பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். மேஜர் ஜெனரல் துமிந்த சிரிநாக அவர்கள் இந்நியமனத்திற்கு முன்னர் இராணுவத் தலைமையகத்தின் பொது விநியோக பணிப்பகத்தின் விநியோக பணிப்பாளர் நாயகமாக பணியாற்றினார்.

இந்நிகழ்வில் பொது விநியோக பணிப்பாளர் நாயக கிளையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினர் பலரும் கலந்து கொண்டனர்.

மேஜர் ஜெனரல் துமிந்த சிரிநாக அவர்களின் சுருக்கமான விவரம் பின்வருமாறு;

மேஜர் ஜெனரல் துமிந்த சிரிநாக அவர்கள் 1966 ஜனவரி மாதம் 12 ஆம் திகதி பிறந்தார். அவர் காலி மஹிந்த கல்லூரி, மற்றும் பதுள்ள மத்திய கல்லூரியில் கல்வி பயின்றார். அவர் 1985 அக்டோபர் மாதம் 01ம் திகதி இலங்கை இராணுவத்தில் பாடநெறி எஸ்.எஸ்.சி இலக்கம் 7 இன் கெடட் அதிகாரியாக இணைந்துக் கொண்டார். இலங்கை இராணுவத்தின் இரண்டாம் லெப்டின்னாக நியமிக்கப்பட்டு 1986 மே மாதம் 31 ஆம் திகதி இலங்கை மின் மற்றும் இயந்திர பொறியியலாளர் படையணியில் நியமிக்கப்பட்டார். மேஜர் ஜெனரல் துமிந்த சிரிநாக தற்போது மின்சார மற்றும் இயந்திர பொறியியலாளர் படையின் படைத் தளபதியாக நியமனம் வகிக்கின்றார்.

அவர் இராணுவத்தின் பல அதிகார பதவிகளை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவற்றின் முக்கியமாக பின்வரும் நியமனங்களை குறிப்பிடலாம். முதலாம் மற்றும் இரண்டாம் மின்சார மற்றும் இயந்திர பொறியியலாளர் படைகளின் கட்டளை அதிகாரி , அடிப்படை பயிற்சி தளத்தின் தளபதி, 22வது படைப்பிரிவின் கர்ணல் ல் நிர்வாகம் மற்றும் வழங்கல், மின்சார மற்றும் இயந்திர பொறியியலாளர் பணிப்பகத்தின் - கர்ணல் மின்சார மற்றும் இயந்திர பொறியியலாளர், மின்சார மற்றும் இயந்திர பொறியியலாளர் படை தலைமையக நிலையத் தளபதி, மின்சார மற்றும் இயந்திர பொறியியலாளர் பணிப்பக பணிப்பாளர், மேற்கு பாதுகாப்பு படை பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் வழங்கல், நிதி முகாமைத்துவ பணிப்பாளர் , வழங்கல் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம், இலங்கை சைக்கிள் ஓட்டுநர் சங்கம் உபத் தலைவர், இராணுவ சைக்கிள் ஓட்டுநர் சங்கம் தலைவர் மற்றும் இலங்கை வாகன பொறியாளர்கள் சங்க உறுப்பினர் (MIAE).

அவரின் சேவைக்கு கிழக்கு மனிதாபிமான நடவடிக்கை மற்றும் வடக்கு மனிதாபிமான செயல்பாட்டு பதக்கம் மற்றும் இன்னும் சில பதக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன.

35 ஆண்டுகளுக்கும் மேலாக தனது இராணுவ வாழ்கையில் பின்வரும் உள்நாட்டு வெளிநாட்டு பயிற்சிகளை பெற்றுள்ளார். இந்தியா இளம் தொழில்நுட்ப அதிகாரி, இந்திய வேலைத்தள குழு கட்டளை , அதிகாரி உயர் பாதுகாப்பு பொறியியல் பாடநெறி- இந்தியா, சீனியர் பொறியியல் அதிகாரி பாடநெறி , இந்தியா குஜராத் எம்.எஸ் பல்கலைக்கழகத்தில் பிரயோக விஞ்ஞான முதுகலை பட்டம், இலங்கை முகாமைத்துவ நிறுவன உறுப்பினர். |