இராணுவத்தின் 71 ஆவது நிறைவாண்டு தினத்தை முன்னிட்டு தலதா மாளிகையில் மத வழிபாடு

29th September 2020

காலி முகத்திடலில் மிக விமர்சையாக கொண்டாடப்படவிருக்கும் 71 ஆவது இராணுவ நிறைவாண்டு தினத்தை முன்னிட்டு (ஒக்டோபர் 10) ஏற்பாடு செய்யப்பட்ட தொடர் மத நிகழ்வுகளானது இன்று 28 ஆம் திகதி கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாலிகையில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் பிரசாதம், அன்னதானம் வழங்குதல் மற்றும் கொடி-ஆசீர்வாத உள்ளிட்ட பல நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக பாதுகாப்புத் தலைமை பிரதானியும் மற்றும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் கலந்து கொண்டதோடு, இராணுவ அதிகாரிகள், இராணுவச் சிப்பாயினர் மற்றும் சிவில் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

துணிச்சலான மற்றும் தன்னலமற்ற தாய்நாட்டைப் பாதுகாக்கும் நாட்டின் பிரதான அமைப்பான இராணுவமானது தற்பொழுது பலதரப்பட்ட தேசிய பாதுகாப்பு மற்றும் வல்லமைமிக்க தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. 1949 ஆம் ஆண்டு 17 ஆம் திகதிய இராணுவச் சட்டத்தின் மூலம் ஏர்ல் கைத்னஸின், பிரிகேடியர் ரோட்ரிக் சின்க்ளேரின் தலைமையில் அதனுடைய முதலாவது நிரந்தர படையினை ஆரம்பித்ததன் ஊடாக 1949 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதி இலங்கை இராணுவம் சிலோன் இராணுவம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 71 ஆண்டுகளில் அதன் வாழ்நாளில் ஒரு முழு அளவிலான இராணுவமாக மலர்ந்தது, இன்றுவரை இலங்கை இராணுவம் 22 இராணுவத் தளபதிகளால் திறம்பட கட்டளையிடப்பட்டு, குறித்த அமைப்பை திறப்பட செயற்படுத்தியுள்ளது. போர் படை, ஆதரவு படைகளின் உடனான 24 படையணிகளின் விரிவாக்கத்தினூடாக நாடு முழுவதிலும் உள்ள அனைத்து இனத்தினதும் இதயங்களையும் மனதையும் வென்றுள்ளது.

மல்லிகைப் பூக்களின் தட்டு ஒன்றை நினைவுச்சின்ன அறைக்கு வழங்கிய பின்னர், புனித வளாகத்திற்கு வருகை தந்த தற்போதைய 23 ஆவது இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் 'முருத்தன்' மற்றும் 'கிலன்பச' பூஜை பிரசாதங்களுக்கு மத்தியில் புனித உள் அறைக்கு மரியாதை செலுத்தினார்.அந்த பாரம்பரிய சடங்குகள் மற்றும் அன்றைய ‘தேவவ’ சடங்குகள் முடிந்தவுடன், இராணுவத்தில் உள்ள அனைவருக்கும் சார்பாக தளபதியவர்கள் , தியாவதான நிலமே அலுவலகத்தில் ஸ்ரீ தலதா மாளிகைக்கு ஒரு குறியீட்டு நாணய நன்கொடையை அளித்தார். தியாவதான நிலமேயின் திரு பிரதீப் நிலங் தேல அவர்கள் ஆண்டு விழாவில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார், அதே சந்தர்ப்பத்தில் இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் முன்னிலையில் அதனை ஏற்றுக் கொண்டார்.

பின்னர், அன்றைய பிரதம அதிதியவர்கள் அஸ்கிரிய பீடத்தின் மிகவும் வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்னநபிதான மகாநாயக்க தேரர் தலைமையில் இடம்பெற்ற 71 மகா சங்க உறுப்பினர்களுக்கான அன்னதானம் வழங்கும் (சங்கீக தான) நிகழ்வில் இணைந்து கொண்டார். பல அனுனாயக தேரர்கள் மற்றும் முன்னணி துறவிகள், வணக்கத்திற்குரிய வெந்தருவே தர்மகீர்த்தி ஸ்ரீ ராத்னபால உபாலி அனுநாயக்க தேரர், வணக்கத்திற்குரிய அனமடுவே ஸ்ரீ தம்மதாசி அனுநாயக்க தேரர், வணக்கத்திற்குரிய மல்வத்தை பீட டொக்டர் நியங்கொட விஜிதசிரி அனு நாயக தேரர் மற்றும் திம்புல்கும்புரே ஸ்ரீ சரணங்கர விமலதம்மபிதான அனு நாயக தேரர் ஆகியோர்களும் இந்த அன்ன தானம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் இராணுவத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகள் மகா சங்க உறுப்பினர்களுக்கு அன்னதானம் வழங்கினர். துறவிகள் இராணுவ அமைப்புக்கு 'அனுஷாசன' ஆசீர்வாதம் அளித்ததுடன், அனைத்து இலங்கையர்களின் நன்மை மற்றும் மூன்று தசாப்த கால யுத்தம் மற்றும் சமீபத்திய வன்முறைகளிலிருந்து நாட்டைக் காப்பாற்றிய அமைப்பான இராணுவத்தால் இதுவரை செய்யப்பட்டுள்ள சாதனைகள் குறித்து அதிகம் பேசினர்.இராணுவம் 1949 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதிலிருந்து நாட்டிற்காக சேவை செய்த மற்றும் உயிர் நீத்த இராணுவப் போர் வீரர்களுக்கும் சார்பாக 'பென்வீடிம' சடங்கு இடம்பெற்றது. காலை நிகழ்வானது அத்தபிரிகர மற்றும் ஏனைய முக்கியமான பொருட்கள் மகா சங்க உறுப்பினர்களுக்கு இராணுவத் தளபதி, இராணுவ பதவி நிவை பிரதானி,பிரதி பதவி நிலை பிரதானி, இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஏனையவர்கள் ஆகியோரினால் வழங்கப்பட்டன.

இந்த நாளின் இரண்டாவது சிறப்பம்சமான இராணுவக் கொடிகளுக்கான ஆசிரவாதமளிக்கும் நிகழ்வானது கண்டியில் இன்று (28) மாலை தொடங்கியது, குறித்த விழாக்களில் கலந்துகொண்ட அனைத்து படையணிகளை சேர்ந்த பிரதிநிதிகள் அனைத்து இராணுவக் கொடிகளை தங்கள் கைகளில் வைத்த வண்ணம் புனிதமான உள் அறைகளுக்குள் கொடிகளுக்கான ஆசீர்வதிக்கும் விழா இடம்பெற்றன. இலங்கை இராணுவ தொண்டர் படையணி , அனைத்து பாதுகாப்புப் படைத் தலைமையகங்கள், முன்னரங்கு பாதுகாப்பு படைப், பிரிவுகள்,பாதுகாப்பு படைப்பிரிவுகள், பிரிகேட் படைத் தலைமையகங்கள் , பயிற்சி நிலையங்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள பாதுகாப்பு படை பிரிவுகளின் வண்ணமயமான இராணுவக் கொடிகளானது வாழ்க்கை நினைவகம், அமைப்பின் கௌரவம் மற்றும் அனைத்தையும் குறிக்கின்றன. அந்த ஒவ்வொரு கொடிகளுக்கும் சேவை செய்யும் உறுப்பினர்கள், குறித்த கொடிகள் மரியாதைக்குரிய வகையில் ஒவ்வொரு படைப் பிரிவின் பிரதிநிதி அதிகாரிகளால் தலதா மாலிகையின் உயர் பீட அறை மற்றும் 'பதிரிப்புவ' (எண்கோணம்) அறைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

இராணுவத் தளபதி இலங்கை இராணுவக் கொடியை ஆசீர்வாதங்களுக்காக எடுத்துச் சென்றார். கொடிகள் பின்னர் மேல் அறையில் 'தேவவ'வுக்குப் பொறுப்பான துறவிகளுக்கு வழங்கப்பட்டன, அங்கு நாட்டின் பாதுகாப்பிற்கான இராணுவத்தின் நீண்ட ஆயுள் வேண்டி ‘செத் பிரித்நிகழ்வு மற்றும் மத ஆசீர்வாத நிகழ்வுகள் இடம்பெற்றன.

இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரிய, இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ரசிக பெர்னாண்டோ, இராணுவ பதவி நிலை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவ சிப்பாயினர் அன்றைய பிரதான நிகழ்வின் போது கலந்து கொண்டனர்.

மல்வத்த பீடத்தலிலுள்ள வணக்கத்திற்குரிய மல்வத்த அனாமடுவே தம்மதாஸி அனுநாயக்க தேரர், வணக்கத்திற்குரிய அரம்பேகம சரணங்கர நாயக்க தேரர் மற்றும் வணக்கத்திற்குரிய கும்புகண்தன்வால புங்கங்நரதன நாயக்க தேரர் உள்ளிட்ட தேரர்கள் ஸ்ரீ தலதா மாலிகையில் இராணுவத்தை ஆசீர்வதிப்பதற்காக ‘கிலன்பச பூஜையானது (28) ஆம் திகதி மாலை பல்லேகலயில் உள்ள 11 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவு தலைமையகத்தில் படையினரின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டது.

இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரிய, இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ரசிக பெர்னாண்டோ, இராணுவ பதவி நிலை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவ சிப்பாயினர் இந்நிகழ்வின் போது கலந்து கொண்டனர். . |