இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் விளையாட்டு மைதானம் இராணுவ தளபதியால் திறந்து வைப்பு

21st September 2020

குருநாகலை வெஹெராயில் அமைந்துள்ள இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி தலைமையகத்திற்கு அருகில் உள்ள ஹெரலியவலவில் உள்ள இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி தலைமையக பட்டாலியனின் புதிய விளையாட்டு மைதானம் (18) ஆம் திகதி காலை பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு வருகை தந்த இராணுவ தளபதியை இராணுவ பிரதி பதவி நிலை பிரதணியும் தேசிய பாதுகாப்பு படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரசிக பெர்னாண்டோ, மற்றும் அவர்களால் வரவேற்கப்பட்டார்.

முதலாவதாக, ஹெரலியவலைக்கு வருகை தந்த இராணுவத் தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி தேசிய பாதுகாப்பு படையணியின் படையினரால் நுழைவாயிலில் பாதுகாப்பு வரவேற்பு மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து மரியாதை அணிவகுப்பும் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இராணுவத் தளபதி புதிய விளையாட்டு மைதானத்தின் நினைவு பலகை திறந்து வைத்ததுடன் விளையாட்டு மைதானத்தையும் திறந்துவைத்தார்.

நிகழ்வின் அடுத்ததாக இராணுவத் தளபதி அவர்களால் முகாம் வளாகத்தில் வருகையின் அடையாளமாக மரக்கன்றும் நட்டுவைக்கப்பட்டன.

பின்னர், இராணுவ தளபதி அவர்கள் இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி தலைமையகத்தின் நூற்றுக்கணக்கான படையினர்கள் மத்தியில் திறமையான தொழில் படைப்பாளர்களாக தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான பணியில் இராணுவ பங்களிப்பின் முக்கியத்துவம் தொடர்பாக உரையாற்றினார்.

மேலும் அவர் உறையாற்றுகையில் "இன்று நாங்கள் இலங்கை இராணுவ தேசிய பாதுகாப்பு படையணி தலைமையக பட்டாலியன் ஹெரலியவலையில் புதிதாக அமைக்கப்பட்ட பெரிய விளையாட்டு மைதானத்தைத் திறந்தோம், "இராணுவ முகாம் நிறுவப்படுவதற்கு முன்னர், இந்த நிலத்தை சுற்றி சட்டவிரோத நடவடிக்கைகள் நடந்தன, முகாம் நிறுவப்பட்ட பின்னர், கிராமவாசிகள் பாதுகாப்பு மற்றும் சலுகைகளைப் பெற்றனர் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஒரு பௌத்த தேரர் பிரசங்கத்தின் கூறப்பட்டதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.

இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி அதிகாரிகள் மற்றும் பிற அணிகளின் விளையாட்டு திறன்களை மேம்படுத்துவதன் நிமித்தம் நாங்கள் இந்த விளையாட்டு மைதானத்தை நிறுவினோம். எங்களுக்குத் தெரியும், குருநாகலையில் சில காரணங்கள் உள்ளன, நாங்கள் இந்த மைதானத்தையும் உருவாக்குவோம், "இந்த வசதிகள் இராணுவத்திற்கு மட்டுமல்ல, சுற்றியுள்ள பாடசாலை விளையாட்டு வீரர்களுக்காகவும்" என்று அவர் கூறினார்.

ஜனாதிபதி அவர்களின் அறிவுறுத்தலின் போரில் நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் விளையாட்டு திறமைகளை மேம்படுத்தும் நிமித்தம் "முப் படையினர்களின் நிபுணத்துவம் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் போன்றவை தொடர்பாக விளையாட்டு அமைச்சருடன் கலந்துரையாடல் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது. முப்படையினரின் விளையாட்டு பயிற்றுநர்கள், முகாம்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் பிற வசதிகளை பாடசாலையின் விளையாட்டு வீரர்களுக்கும் கிடைக்கச் செய்யலாம் என்று அவர் கூறினார்.

படையினர்களின் உரையின் பின்னர், இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரசிக பெர்னாண்டோ, அவர்கள் பிரதான அதிதியின் வருகையைப் பாராட்டியதுடன், நினைவு சின்னத்தையும் வழங்கினார்.

பின்னர் அனைத்து படையினர்களுடன் தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்துகொண்ட அவர் படையினர்களுடன் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் செல்வதற்கு முன் அனைவருடனும் குழு புகைப்படத்திலும் கலந்துகொண்டதுடன் பார்வையாளர்களின் புத்தகத்தில் பாராட்டுக்களை கையொப்பமிட்டார்.

இந்த நிகழ்வில் இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் அதிகாரிகள் மற்றும் படையினர் பலர் கலந்து கொண்டனர். |