இராணுவத்தை அலங்கரிக்கவும் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தவும் மேலும் 300 விஷேட படையினர்

15th September 2020

மேலும் ஐந்து அதிகாரிகள் மற்றும் 295 படையினர் தீவிர ஒன்பது மாத தொடர்ந்து பாடநெறி இலக்கம் 50 ஊடாக பயிற்சி வழங்கப்பட்டு விஷேட படையணிக்கு இணைக்கும் நிகழ்வானது மதுரு ஓயா அதிநவீன விஷேட படை பயிற்சிப் பாடசாலையில் சனிக்கிழமை (12) காலை வாழ்த்துக்கள் மற்றும் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் இடம்பெற்றது. இதன் பிரம அதிதியாக பாதுகாப்பு பிரதானியும் இராணுவத் தளபதியும் விஷேட படையணியின் படைத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் கலந்து கொண்டனர்.

இராணுவத்தின் மிகவும் உயர் பிரிவுகளில் ஒன்றாக பரவலாக போற்றப்படும் விஷேட படையின் உறுப்பினர்கள் தேசத்தின் பாதுகாப்பிற்கு விலைமதிப்பற்ற உன்னத சேவையை வழங்கி வருகின்றனர். எல்டிடிஈ பயங்கரவாதிகளுக்கு எதிரான சில இறுதி ஆண்டு யுத்தத்தின் போது அவர்களின் விதிவிலக்கான தந்திரோபாய நீண்ட தூர ரோந்து நடவடிக்கைகள் காரணமாக அங்கீகரிக்கப்பட்டு புகழ்பெற்றவர்கள்.

பிரதம விருந்தினரான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா பயிற்சி பாடசாலை வளாகத்திற்கு வருகை தந்தபோது முதலில் நுழைவாயிலில் பாதுகாவல் அறிக்கையிடல் இடம்பெற்றது பின்னர் அணிவகுப்பு பரிசீலனை செய்ய அழைக்கப்பட்டார். விஷேட படையின் நிலையத் தளபதி பிரிகேடியர் நிசங்க எரியகம, விஷேட படை பயிற்சி பாடசாலையின் தளபதி கேணல் பிரசாத் ரண்துனு அணிவகுப்பு மற்றும் அணிவகுப்பு கட்டளை அதிகாரியுடன் தளபதி அணிவகுப்பை பரிசீலனை செய்தார். அங்கு அவருக்கு சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது.

நடவடிக்கைகளுக்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்த்து விழாவின் போது அந்த வீரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சின்னங்கள் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டது. பின்னர் இராணுவத் தளபதி பயிற்சி பெற்றவர்களுக்கு விஷேட படை சின்னங்கள் மற்றும் வர்ணங்களை வழங்கினார். இந்நிகழ்வில் மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க, மேஜர் ஜெனரல் சேனரத் யாபா மற்றும் பிரிகேடியர் விபுலா இஹாலகே ஆகியோரும் இணைந்துக் கொண்டனர். பின்னர் பாடநெறி இலக்கம் 50 இன் திறமை மிக்கவர்களில் சிறந்தவர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்க பிரதம அதிதி அழைக்கப்பட்டார். பாடநெறியின் அதிசிறந்தவருக்கான விருதும் உடற்தகுதிக்கான விருதும் லெப்டினன்ட் டிஎம்டிஜிஎன்எம் தென்னகோன் அவர்களுக்கு வழங்கப்பட்ட வேளையில் சிறந்த துப்பாக்கி சுடும் வீரராக லான்ஸ் கோப்ரல் ஏ.ஜி. அலுத்கெதர பெற்றுக்கொண்டார்.

பாதுகாப்பு பிரதானி இந்நிகழ்வில் உரையாற்றும் போது பயிலுனர்களுக்கு பயிற்சியின் முக்கியத்துவத்தை நினைவுபடுத்தினார். மேலும் அவரை இந்த நிகழ்விற்கு அழைத்தமைக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்தும் உரையில் விஷேட படையின் வரலாறு, நாட்டின் பாதுகாப்பிற்கு அவர்களில் ஈடுசெய்யமுடியாத தியாகிகளுக்கு அஞ்சலி, இப்பயிற்சிக்காக தங்கள் பிள்ளைகளை இணைத்த பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு பாராட்டு, விஷேட படையில் போர் காலங்களில் ஊனமுற்றோருக்கான சுகபிராத்தனை, நல்வாழ்வுக்கு முழுமையாக ஆதரவை தரும் முப்படைகளின் சேனாதிபதி ஜனாதிபதி மற்றும் கௌரவ பிரதமருக்கான நன்றி என்பன உள்ளடங்கி இருந்தது.

பெரசூட் கண்காட்சி ,ஆகாய சாகாசங்கள், பேண்ட் கண்காட்சி, மோட்டார் சைக்கிள் சாகசம்,, விஷேட படை திறன்கள், டீக்வுண்டோ சண்டைக்கலை, சண்டை முறைமைகள் என்பன விழாவை அலங்கரித்தன. குழு புகைப்படம் எடுத்தல் மற்றும் தேனீர் விருந்துபசாரம் என்பனவும் இடம்பெற்றது.

பின்னர் தளபதி விஷேட படை பயிற்சி பாடசாலையில் புதிதாக கட்டப்பட்ட லெப்டினன் கேணல் லலித் ஜயசிங்க ஞாபகார்த்த உடற்பயிற்சிக் கூடத்தைத் திறந்து வைத்தார். தொடர்ந்து மகிழ மரக்கன்று ஒன்றையும் நாட்டி வைத்தார். பின்னர் பயிலுனர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் நலன்புரி மற்றும் பிற விஷயங்கள் தொடர்பாக உரையாடினார்.

அதன்பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாதுகாப்பு பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா விஷேட படை பாடநெறி எண் 50 இன் முக்கியத்துவம், இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சீருடை மற்றும் விஷேட படை செயல்பாட்டு திறன்கள் என்பன தொடர்பாக கருத்து தெரிவித்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் பேரில், தேவையான அனைத்து விசாரணைகளும் முன்னெடுக்கப்படுவதாகவும், நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் நடைபெற்று வருவதாகவும் அதன்படி இராணுவம் மற்றவர்களுடன் இணைந்து செயற்படும் எனக் கூறினார்.

இலங்கை மண்ணில் இருந்து போதைப்பொருள் கலாசாரத்தை முழுமையாக ஒழிக்க பொலிஸாருடன் இணைந்து இராணுவம் சகல நடவடிக்கைகளையும் எடுக்கும். உறுதியளித்தார்.

நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி சுஜீவா நெல்சன், கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஷிந்தக கமகே, பொது செயல்பாடுகள் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க, 57வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சேனரத் யாபா ,சிரேஸ்ட அதிகாரிகள், அழைப்பாளர்கள், பெற்றோர்கள் மற்றும் நலம் விரும்பிகள் கலந்துக்கொண்டனர். |