குகுலேகங்கையிலுள்ள ‘லயா லெசர்’ ஹோட்டல் புதிய வசதிகளுடன் நிர்மானிப்பு
7th September 2020
இராணுவம் – சிவில் நிர்வாகத்தினால் பராமரிக்கப்படும் குகுலேகங்கையில் அமைந்துள் ‘லாயா லெசர்’ ஹோட்டலானது பிரசித்தி பெற்ற ஹோட்டல்களில் ஒன்றாகும். இந்த ஹோட்டலில் விடுமுறையை மகிழ்ச்சியுடன் களிப்பதற்கான அதிநவீன வசதிகளை உள்ளடக்கி பல்வேறுபட்ட சுவையான உணவுகளும் , மதுபாச்சாலை நிலையங்களும் புதிய வசதிகளுடன் நிர்மானிக்கப்பட்டுள்ளன.
புதிதாக அனைத்து வசதிகளுடன் நிர்மானிக்கப்பட்ட இந்த புதிய கட்டிடத்தை திறந்து வைப்பதற்காக பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்படினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வருகை தந்து இந்த புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந்த ஹோட்டல் நிர்வாகத்தின் பொது முகாமையாளர் கேர்ணல் ரொஹான் வெத்தசிங்க அவர்களது அழைப்பையேற்று இராணுவ தளபதி அவர்கள் ‘லயா லெசர்’ ஹோட்டல் பகுதிக்கு வருகை தந்து சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு திறந்து வைத்தார். பின்னர் இராணுவ தளபதி அவர்களினால் இந்த ஹோட்டல் வளாகத்தினுள் மரநடுகைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த புதிய கட்டிடமானது லயா ஹோட்டல் முகாமைத்துவ நிர்வாகத்தினால் ஒதுக்கப்பட்ட 13 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மானிக்கப்பட்டது.
சகல தரமான வசதிகளுடன் நிர்மானிக்கப்பட்ட இந்த லயா ஹோட்டலின் பெயர் பலகை மற்றும் ரிபன்கள் வெட்டப்பட்டு இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த இராணுவ தளபதி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டன, பின்பு பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்தில் இராணுவ தளபதி அவர்கள் கையொப்பமிட்டார்.
இங்கிருக்கும் சமயத்தில் இராணுவ தளபதி அவர்கள் உரையாற்றும் போது சமையலறை கலைகள், பணிப் பெண் சுகாதார நடைமுறைகள், சாப்பாட்டு நடைமுறைகள் , பகிர்ந்தளிப்பு உணவு சேவைகள், இளைஞர்களுக்கான விருந்தோம்பல் பயிற்சி வகுப்புகள் நடத்துவது தொடர்பாக ஹோட்டல் முகாமைத்துவ நிருவாகத்திற்கு நன்றிகளை தெரிவித்தார். இந்த ஹோட்டலின் ‘லயா’ என்ற சொல்லானது பண்டைய கால சமஸ்கிர மொழியில் ஓய்வு அல்லது நிதானம் என்று பொருள்படும் அத்துடன் இந்த லயா ஹோட்டலானது ‘லயா பீச்’, ‘லயா சவாரி, ‘லயா லெஷர்’ என்று பல பிரிவுகளையும் கொண்டு சிறந்த சேவைகளை புரிந்து வருகின்றது.
பின்பு இந்த ஹோட்டலில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இராணுவ தளபதி அவர்கள் கருத்து தெரிவிக்கையில் ‘லயா லெஷர்’ அதன் புதிய விரிவாக்கம் மற்றும் பிரபலத்துடன் எதிர்காலத்தில் இப்பகுதியில் சிறந்த சேவையினை இந்த ஹோட்டலினால் வழங்கப்பட்டு உள்ளூர், வெளியூர் உல்லாச பயணிகளுக்கு தரமான சேவையை வழங்கி எமது உள்ளூர் உணவு தயாரிப்புகளை சிறப்பான முறையில் மேற்கொண்டு தரமான சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவார்கள் என்றும் இப்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் சீரற்ற வான்நிலை காரணமாக ஏற்படும் அனர்த்தங்களுக்கு முத்தரப்பினர் சேவைகளை வழங்குவதற்கும் தயாராகவுள்ளனர். அத்துடன் கோவிட் – 19 தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு மட்டும் இப்போது கொரோனா தொற்று நோய் இருப்பதாகவும் எமது நாட்டினுள் முழுமையாக கொரோனா தொற்று நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். |