வெளிநாட்டவர்கள் தங்கள் வீட்டிற்கு அனுப்பி வைப்பு கோவிட் மையம் தெரிவிப்பு

20th August 2020

இன்றைய (20) ஆம் திகதி அறிக்கையின் படி நாட்டில் கொரோனா தொற்று நோய்க்கு எவரும் உள்ளாகியிருக்க வில்லையென்று அறிக்கை பதிவாகியுள்ளது. மேலும் இன்றைய அறிக்கையின் பிரகாரம் கந்தகாடு புணர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்று நோய்க்குள்ளாகிய நபர்களது மொத்த எண்ணிக்கை 629 ஆக உள்ளது. அவர்களினல் 508 நபர்கள் புணரவாழ்வளிக்கப்பட்டு வரும் கைதிகள், 67 ஊழியர்கள், 5 விருந்தின ஊழியர்கள், வெலிக்கடைச் சிறைச்சாலையில் பாதிக்கப்பட்ட ஒருவருடன் தொடர்பு கொண்ட நபரொருவர் என கோவிட் – 19 மைய அறிக்கை வெளியிட்டுள்ளது.

கட்டார் டோஹா QR 668 விமானத்தின் மூலம் 20 பிரயாணிகளும், குவைட்டிலிருந்து UL 230 விமானத்தின் மூலம் 160 பிரயாணிகளும், சென்னையிலிருந்து UL 1126 விமானத்தின் மூலம் 290 பிரயாணிகளும், டுபாயிலிருந்து UL 226 விமானத்தின் மூலம் 260 பிரயாணிகளும் வருகை தந்தனர். மேலும் அபுதாபியிலிருந்து EY 648 விமானத்தின் மூலம் 08 பயணிகள் இலங்கைக்கு வரவுள்ளனர். இவர்கள் அனைவரும் இலங்கையில் முப்படையினரால் நிருவாகித்து வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இன்றைய தின அறிக்கையின் படி தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்த 04 பேர் பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்பு தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். ருவால்ல தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து ஒருவரும், கல்பிட்டி தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து மூவரும் தனிமைப்படுத்தலின் பின்பு தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது வரைக்கும் தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து 31,134 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு வெளியேறிச் சென்றுள்ளனர். மேலும் நாடாளவியல் ரீதியாக முப்படையினரால் பராமரித்து வரும் 44 தனிமைப்படுத்தல் மையங்களில் 5,944 நபர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 18 ஆம் திகதி அறிக்கையின் பிரகாரம் இன்றைய தினத்தில் 1,680 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், இதுவரைக்கும் முழுமையாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 195,025 ஆகும்.

இன்று கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ள 05 நபர்கள் இணங்காணப்பட்டார்கள் இவர்களில் இருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள், மூவர் கந்தகாடு புணர்வாழ்வு மையத்திலிருந்த நபர்களாவர். கந்தகாடு புணர்வாழ்வு மையத்திலிருந்து கொரோனா தொற்று நோய்க்குள்ளாகியுள்ள 570 நபர்கள் மருத்துவ சிகிச்சையின் பின்பு குணமடைந்து வெளியேறியுள்ளனர். மேலும் 59 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். (நிறைவு) |