உலக வரலாற்றை உருவாக்கும் கின்னஸ் புத்தகத்தில் பெயர் பதிப்பதற்கு தகுதி பெற்ற இரட்டை இராணுவ மேஜர் ஜெனரல்கள்
1st August 2020
கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் தடம் பதிப்பதற்கு தகுதி பெற்ற இலங்கை இராணுவத்தின் மேஜர் ஜெனரல் பதவியிலிருக்கும் இரட்டையர்களான மேஜர் ஜெனரல் பூரக செனெவிரத்ன மற்றும் மேஜர் ஜெனரல் ஜயந்த செனெவிரத்ன அவர்களுக்கு இராணுவ தலைமையகத்தில் இன்றைய தினம் (30) ஆம் திகதி இவர்களை கௌரவிக்கும் நிகழ்வானது இடம்பெற்றது.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார். அத்துடன் கின்னஸ் புத்தக பதிவுகளுக்கான இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியும், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் தேசிய சபையின் தலைவர் திரு சமன் அமரசிங்க மற்றும் மூத்த இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த இரட்டை சகோதரர்களான இலங்கை சமிக்ஞை படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் பூரக செனெவிரத்ன அவர்கள் பாதுகாப்பு தலைமை பிரதானி அலுவலகத்தில் பதவிநிலை பிரதானியாகவும், மற்றவரான மேஜர் ஜெனரல் ஜயந்த செனெவிரத்ன அவர்கள் சிங்கப் படையணியின் படைத் தளபதியும், மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையத்தின் படைத் தளபதியாக தற்போது பதவி வகிக்கின்றார்கள். இவர்கள் இருவரும் ஒரே நாளில் பிறந்து ஒரே நாளில் பாடசாலைக்கு உட்பகுத்தப்பட்டு உயர்தரம் வரை ஒன்றாக படித்து இருவரும் பாடசாலையில் மாணவ தலைவராக இருந்து விளையாட்டு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு பின்னர் இலங்கை இராணுவத்தில் கெடெற் அதிகாரியாக இருவரும் இணைந்து கொண்டனர். பின்னர் குவேட்டாவில் வெளிநாட்டு பயிற்சியை ஒன்றாக மேற்கொண்டு இராணுவத்தில் அனைத்து பதவியுயர்வுகளையும் ஒன்றாக பெற்று இருவரும் ஒரே தினத்தில் இராணுவத்திலிருந்து ஓய்வு பெறவுள்ளனர்.
இராணுவ தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற இந்த நிகழ்வின் முதல் அங்கமாக கையொப்பமிடும் நிகழ்வுகள் இடம்பெற்றது. இதன்போது விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கின்னஸ் உலக சாதனைகளின் தேசிய சபையின் தலைவர் திரு சமன் அமரசிங்க அவர்கள் அறிமுக உரையை நிகழ்த்தினார். இதன் போது இந்த இரட்டை மூத்த உயரதிகாரிகள் இருவரும் கின்னஸ் சாதனை புத்தகத்திற்குள் உட்புகுத்துவதற்கான தகுதியினையும் பெற்றுள்ளனர் என்று தெரிவித்து இவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
பின்னர் இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியா வருகை தந்த இராணுவ தளபதி அவர்கள் உறையாற்றும் போது இப்படியான இரு சகோதரர்களை நன்றாக வளர்த்து இந்த சமூகத்திற்கு முன் நிறுத்தியதற்கு இவர்களது பெற்றோர்களுக்கு இந்த நிகழ்வினூடாக முதற்கன் நன்றியை தெரிவித்தார். அத்துடன் இருவரும் இராணுவத்தில் இணைந்து இராணுவத்திலுள்ள உயர் பதவியான மேஜர் ஜெனரல் பதவிக்கு இவர்கள் பதவியுயர்த்தப்பட்டதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அத்துடன் இந்த நிகழ்விற்கு வருகை தந்த கின்னஸ் சாதனை பிரதிநிதியான திரு சமன் அமரசிங்க அவர்களிற்கும் நன்றியை தெரிவித்தார்.
சிறிது நேரத்தின் பின்பு இந்த நிகழ்வில் கின்னஸ் புத்தகத்திற்கு உட்புகுத்துவதற்கு தகுதி பெற்ற இந்த இராணுவ உயரதிகாரிகளது வீடியோ காட்சிகள் பார்வையாளர்களுக்காக இந்த நிகழ்வினூடாக முன் வைக்கப்பட்டு பின் இரட்டையர்களது முறையான ஆவணங்களில் கையொப்பமிடப்பட்டது.
உதவி பதிவாளர் பணிப்பாளர் நாயகம் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ பிரதிநிதி திருமதி லக்சிகா கணேபொல, பின்னர் இரட்டையர்களின் இரு பிறப்புச் சான்றிதழ்களை அங்கீகரித்து, கின்னஸ் சாதனை பிரதிநிதியான திரு சமன் அமரசிங்க அவர்களிற்கும் இச்சந்தர்ப்பத்தில் கையளித்தார்.
பின்னர் இராணுவ தளபதி அவர்களினால் இந்த இரட்டை அதிகாரிகளது அனைத்து இராணுவ வாழ்க்கை ஆவணங்களும் கின்னஸ் உலக சாதனை பிரதிநிதிக்கு வழங்கி வைக்கப்பட்டன. அச்சந்தர்ப்பத்தில் திரு சமன் அமரசிங்க அவர்களினால் கின்னஸ் உலக சாதனைக்கு தகுதி பெறுவதற்கான முயற்சியை அங்கீகரிக்கும் முகமாக மேஜர் ஜெனரல் பதவியிலிருக்கும் இரு உயரதிகாரிகளுக்கும் பாராட்டு கடிதங்களை வழங்கி வைத்தார்.
மேலும் இந்த நிகழ்வின் இறுதியில் மேஜர் ஜெனரல் பூரக செனெவிரத்ன அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டன. இந்த நிகழ்வில் இராணுவ பதவிநிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன, பிரதி பதவிநிலை பிரதானி மேஜர் ஜெனரல் ரசிக பெர்ணாண்டோ, மூத்த உயரதிகாரிகள் இணைந்திருந்தனர்.
மேஜர் ஜெனரல் பதவியிலிருக்கும் இருவரதும் சுயவிபரங்கள் கீழ்வருமாறு
ஹிடேல்லென பூரக செனெவிரத்ன மற்றும் ஹிடேல்லென ஜயந்த செனெவிரத்ன போன்றோர் 1965 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் திகதி இரத்தினபுரியில் பிறந்தனர். இவர்களது தந்தையார் ஹிடேல்லென ஜனசீக செனெவிரத்னவும், தாயார் சிங்காவத்தே லீலா செனெவிரத்னவும் ஆவார். இவர்கள் இருவரும் இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரியில் கல்வியை மேற்கொண்டனர். இருவரும் ஒன்றாக பாடசாலையில் இணைந்து 1980 ஆம் ஆண்டு ஒன்றாக சாதார பொது தராதர பரீட்சைக்கு தோற்றி பின்பு உயர்தர கணித அறிவியல் துறைக்கு இவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் பாடசாலைகளில் கனிஷ்ட, சிரேஷ்ட மாணவ தலைவர்களாகவும் விளங்கியுள்ளனர். அத்துடன் பாடசாலை பருவத்தில் விளையாட்டு துறை மற்றும் பாட கற்கை நெறிகளில் சிறந்து விளங்கினர்.
உயர்தர படிப்பின் பின்பு இருவரும் 1985 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி இராணுவ அதிகாரி 22 இலக்கத்தின் கீழ் கெடெற் அதிகாரியாக இணைந்து கொண்டனர். பின்னர் தியதலாவையிலுள்ள இராணுவ எகடமியில் அடிப்படை பயிற்சிகளை மேற்கொண்டு பின்னர் பாகிஸ்தான் மெங்ளா பயிற்சி முகாமில் பயிற்சியினை மேற்கொண்டு 1986 ஆம் ஆண்டு 24 ஆம் திகதி பாகிஸ்தான் பயிற்சி முகாமில் இரண்டாம் தர லெப்டினன்ட பதவியை பெற்றுக் கொண்டு வெளியேறினர். பின்பு பாகிஸ்தானிலுள்ள குவேட்டாவிலிலுள்ள காலாட்படை பயிற்சி முகாமில் இளம் அதிகாரிகள் பயிற்சிகளை மேற்கொண்டு இருவரும் ஒன்றாக பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறினர். .
இவர்கள் இருவரும் பயிற்சி நிறைவின் பின்பு பூரக செனெவிரத்ன இலங்கை சமிக்ஞை படையணிக்கும், ஜயந்த செனெவிரத்ன அவர்கள் இலங்கை சிங்கப் படையணிக்கும் இராணுவத்திலுள்ள இரு படையணிகளுக்கு உட்புகுத்தப்பட்டனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு படையணிகளில் இணைக்கப்பட்டதற்கு என்ன ஒரே தலைமையகத்தின் கீழ் ஒன்றாக பணிபுரிந்துள்ளனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இருவரும் இராணுவத்தில் இரண்டாம் லெப்டினன்ட் பதவியிலிருந்து மேஜர் ஜெனரல் பதவி வரைக்கும் ஒரே தினத்தில் பதவியுயர்த்தப்பட்டுள்ளனர். உலகவரலாற்றிலே இவர்களது பிறந்த தினமான 2018 ஆம் ஆண்டு 6 ஆம் திகதி தங்களது 53 ஆவது வயதில் மேஜர் ஜெனரல் பதவிக்கு இவர்கள் உயர்த்தப்பட்டனர். அத்துடன் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதி தங்களது இராணுவ வாழ்க்கையில் 35 வருட சேவைகளை பூர்த்தி செய்து தங்களது 55 ஆவது வயதில் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். |