புதிய கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி உத்தியோகபூர்வ விஜயம்

31st July 2020

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட அவர்கள் புதிதாக பதவியேற்றதன் பின்னர் 57 மற்றும் 65 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுகளுக்கு 2020 ஜூலை 28 – 29 ஆம் திகதிகளில் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

இப் படைப் பிரிவுக்கு வருகை தந்த புதிய படைத் தளபதியை 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டி.ஜி.எஸ். செனரத்யாபா அவர்கள் வரவேற்றதுடன் படையினரால் நுலைவாயிற் வரவேற்பு மரியாதை வழங்கப்பட்டன. . அதன் பின்னர் அவர் முகாம் வளாகத்தில் ஒரு மரக்கன்றையும் நட்டுவைத்து அனைத்து படையினர்களுடன் தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்டார்.

அதன் பின்னர், 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி அவர்களால் நிர்வாகம், படைப் பிரிவின் நடவடிக்கை மற்றும் வழங்கல் அம்சங்கள் தொடர்பான சுருக்கமான விளக்கக்காட்சிகள் முன்வைக்கப்பட்டன. அவர் புறப்படுவதற்கு முன்பு, 57 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தில் அனைத்து படையினர்களுடனும் குழு புகைப்படத்திலும் இணைந்து கொண்டார்.

அடுத்த கட்டமாக, அருகிலுள்ள உள்ள 572, 571 மற்றும் 573 ஆவது படைப்பிரிவு தலைமையகங்களை அவர் பார்வையிட்டார், அங்கு அப் படைப் பிரிவின் தளபதிகள் தங்களது படையினர்களின் செயல்பாட்டு அம்சங்கள் தொடர்பாக சுருக்கமான விளக்கங்களை அவருக்கு வழங்கினர்.

அடுத்த நாள், அவர் 65 ஆவது படைப் பிரிவு தலைமையகத்திற்குச் விஜயத்தை மேற்கொண்டார். இப் படைப் பிரிவிற்கு வருகை தந்த படைத் தளபதிக்கு படையினரால் நுலைவாயிற் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து 65 ஆவது படைப் பிரிவு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டாரா அவர்களால் வரவேற்கப்பட்டார்.

நடைமுறையில் இருந்ததைப் போலவே, 65 ஆவது படைப் பிரிவு மற்றும் 651, 652 மற்றும் 653 ஆவது படைப் பிரிவு தலைமையங்களின் படைத் தளபதிகளால் படைப் பிரிவுகளின் நடவடிக்கை மற்றும் நிர்வாக பணிகளுக்கு பொருத்தமாக விளக்கக்காட்சிகள் முன்வைக்கப்பட்டன. சிறிது நேரத்திற்குப் பிறகு அவர் 651, 652, 653 படைப்பிரிவுகள் மற்றும் முலங்கவில்லில் உள்ள 65 ஆவது படைப் பிரிவு பட்டாலியன் பயிற்சிப் முகாமிற்கு விஜயத்தை மேற் கொண்டார்.

அதற்கமைய படைப் பிரிவு தலைமையகத்தின் கீழ் ஒவ்வொரு அமைப்பிலும் உள்ள படைத் தளபதிகள் உரையாற்றியதுடன், அர்ப்பணிப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் நியமிக்கப்பட்ட கடமைகளைச் செய்தல் மற்றும் வீரர்களின் நிலையான பயிற்சி மூலம் அவர்களின் தொழில்முறை திறன்களை மேம்படுத்துதல் தொடர்பான முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

அவரின் வருகையின் அடையாளமாக படைப் பிரிவுகளில் மர நடுகையிட்டதுடன், அந்த இடங்களில் பார்வையாளர்களின் பதிவு புத்தகங்களில் கையெழுத்திட்டார். அவரின் வருகையின் போது அனைத்து படைப்பிரிவு தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் படையினர்களும் கலந்து கொண்டனர். |