குருவிட்டையிலுள்ள கெமுனு காலாட் படையணி தலைமையகத்திற்கு இராணுவ தளபதி விஜயம்
30th July 2020
குருவிடையில் அமைந்துள்ள கெமுனு காலாட் படையணி தலைமையகத்திற்கு புதிய விளையாட்டு மைதானத்திற்கான பெவிலியன் (கூடாரம்) அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டுவதற்காக பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியும் தேசிய விளையாட்டு தெரிவுக் குழு தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இன்று (25) ஆம் திகதி வருகை தந்தார்.
படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவ தளபதியை நுழைவாயில் வைத்து இராணுவ சம்பிரதாய முறைப்படி வரவேற்று பின்னர் கெமுனு காலாட் படையணியின் படைத் தளபதியும், இராணுவ தொண்டர் படையணியின்’ படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் பங்ஷஜயா அவர்களினால் வரவேற்கப்பட்டு இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் இராணுவ தளபதிக்கு தலைமையக வளாகத்தினுள் படையினரால் வழங்கி வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். பின்னர் இராணுவ தளபதி அவர்கள் தலைமையக வளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபிக்கு சென்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவத்தினரை நினைவு கூர்ந்து மலரஞ்சலிகளை செலுத்தினார்.
கெமுனு காலாட் படையணியின் படைத் தளபதியின் அழைப்பையேற்று வருகை தந்த இராணுவ தளபதி அவர்கள் சமய சம்பிரதாய அனுஷ்டானங்களின் பின்பு புதிதாய் அமைக்கவிருக்கும் மைதானத்திற்கான பெமிலியன் கூடாரத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்து பின்பு அந்த வளாகத்தினுள் மரக்கன்றொன்யையும் நாட்டி வைத்தார்.
மேலும் தலைமையக வளாகத்தினுள் தேசபந்து பட்டம் பெற்ற ஓய்வு பெற்ற லெப்டினன்ட் கேர்ணல் விமலதாஸ எனும் அதிகாரியின் பெயரில் புதிதாய் அமைக்கப்பட்ட உள்ளரங்க மைதான பெயர் பலகையும் இராணுவ தளபதியினால் திறந்து வைக்கப்பட்டு பின்பு இராணுவ தளபதிஅவர்கள் இந்த உள்ளரங்க மைதானத்தில் பெட்மின்டன் ஆட்டத்தையும் ஆடி ஆரம்பித்து வைத்தார்.
இந்த நிகழ்வில் வரவேற்புரை மேஜர் ஜெனரல் பங்ஷஜயா அவர்களினால் ஆற்றப்பட்டன. அதனை தொடர்ந்து ‘மினிபுர கெமுனு நத் ‘ கண்காட்சியின் போது கெமுனு காலாட் படையணிக்கு கிடைத்த நிதியில் 4 இலட்சம் ரூபாய் இராணுவ சுபசாதனை நிதியத்திற்காக இராணுவ தளபதிக்கு கெமுனு படைத் தளபதி அவர்களினால் இந்த நிகழ்வினூடாக வழங்கி வைக்கப்பட்டன. பின்பு இராணுவ தளபதி அவர்கள் இராணுவத்தினர் மத்தியில் உரையினை மேற்கொண்டார். அதன் போது இராணுவத்தினரது பொறுப்புகள் மற்றும் உடல் பயிற்சியின் மூலம் உடல் திடகார்த்தமாக வைத்து கொண்டால் விளையாட்டு துறையில் சிறப்பாக செயற்படலாம் என்று வலியுறுத்தினார்.
மேலும் இராணுவ தளபதி அவர்கள் இந்த தலைமையக அதிகாரி விடுதியில் ஒழுங்கு செய்யப்பட்ட பகல் விருந்தோம்பலில் கலந்து கொண்டார். பின்பு இராணுவ தளபதி அவர்கள் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு வையொப்பமிடும் புத்தகத்தில் கையொப்பமிட்டு புறப்பட்டுச் சென்றார்.
இந்த நிகழ்வில் கெமுனு காலாட் படையணியைச் சேர்ந்த உயரதிகாரிகள், ஓய்வு பெற்ற மூத்த அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். |