பாதுகாப்பு அமைச்சினால் கடற்படை தளபதிக்கு பிரியாவிடை
13th July 2020
பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தலைமையில்பாதுகாப்பு அமைச்சில் திங்கள்கிழமை 13ம் திகதி ஓய்வுபெறும்கடற்படையின் 23 வது கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா மற்றும் கடற்படை சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி அருந்ததி ஜெயநெத்தி ஆகியோருக்கான பிரியா விடை நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் பாதுகாப்புத் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி, விமானப்படைத் தளபதி, மேலதிக செயலாளர்கள், பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்புத் படைபணிப்பாளர், முப்படைகளின் உயர் அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சின் சேவை வனிதையர் பிரிவு தலைவி, இராணுவ சேவை வனிதையர் பிரிவு தலைவிதிருமதி சுஜீவா நெல்சன், விமானப்படை மற்றும் பொலிஸ்சேவை வனிதா பிரிவின் தலைவிகள் மற்றும் ஒரு சில அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பிரியாவிடை உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர்மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னகடல் பரப்பில் சட்டவிரோத நடவடிக்கைகளை கண்காணிக்க கரையிலிருந்து வெகு தொலைவிக்கு கப்பல்களை அனுப்பும் செயல் திட்டத்திற்கு வைஸ் அட்மிரல் டி சில்வாவின் பங்களிப்பைப் பாராட்டினார். இன்று ஜூலை 13 திகதி கடற்படையில்வெளியேறும்வைஸ் அட்மிரல் டி சில்வாவின் முக்கியமான காலகட்டத்தில் முன்மாதிரியான வழிக்காட்டலில் சரியான திசையை நோக்கி கடற்படை செய்ய முடிந்தது என குறிப்பிட்டார்.
இங்கு உரையாற்றிய மேஜர் ஜெனரல் குணரத்ன, அமைப்பைபிலிருந்து ஓய்வுபெறுபவர்களுக்கு வரலாற்று ரீதியாக இராணுவத்தால் பின்பற்றப்பட்டும் வழக்கம் காணப்படுகின்றது. 36 ஆண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு திறன்களில் கடற்படை ஊடாக தேசத்திற்கு முன்மாதிரியான சேவையை வழங்கிய சிறந்த கடற்படை அதிகாரியான வைஸ் அட்மிரல் டி சில்வா ஓய்வு பெறும் இச்சந்தர்பத்தில் பாதுகாப்பு அமைச்சும் இன்று முதல் அதே நடைமுறையைத் தொடங்கியுள்ளது என்று குறிப்பிட்டார்.
வைஸ் அட்மிரல் டி சில்வா 2019 ஜனவரி மாதம் 1 ஆம் திகதி கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.வைஸ் அட்மிரல் டி சில்வா பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு உயர்அதிகாரிகள் மற்றும் நிகழ்வில் கூடியிருந்த அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார், அவர் கடற்படைத் தளபதியாக இருந்த காலத்தில் முடிவுகளை மேற்கொள்வதற்கு உயர் நிர்வாகத்திடமிருந்து கிடைத்த தலைமைத்துவம் முக்கியமானது என குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில்ஓய்வு பெறும் கடற்படைத் தளபதிக்குபாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் குணரத்ன அவர்களால் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. கடற்படை சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி அருந்ததி ஜெயநெத்திக்கு பாதுகாப்பு அமைச்சின் சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி சித்ராணி குணரத்ன அவர்களால் சிறப்பு நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்வில் மேலதிக செயலாளர் (பாதுகாப்பு) பீ.பி.எஸ்.சி நோனிஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். (ஆதாரம்: பாதுகாப்பு அமைச்சு) |