இராணுவ தளபதியினால் நுவரெலியவில் இராணுவ விடுமுறை விடுதிக்கான அடிக்கல் நாட்டு விழா

4th July 2020

நீண்டகால தேவைகளின் நிமித்தம் நுவரெலியாவிலுள்ள 3 (தொ) ஆவது இலங்கை சிங்கப் படையணி வளாகத்தினுள் இராணுவ அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு விடுமுறை காலங்களில் விநோதமாக காலத்தை களிப்பதற்காக விடுதி ஒன்று அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவானது பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களினால் இன்று காலை (2) ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டன.

இராணுவ தளபதி அவர்களின் வழிக்காட்டுதலின் பிரகாரம் ஹவா-எலியவில் அமைந்துள்ள 3 ஆவது தொண்டர் சிங்கப் படையணி தலைமையக வளாகத்தினுள் இராணுவ தளபதி அவர்கள் வருகை தந்து இந்த விடுதிக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார். இச்சந்தர்ப்பத்தில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர்.

இந்த அடிக்கல் விழாவானது மகா சங்க தேரர்களின் மதசமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த இராணுவ தளபதி அவர்களினால் அடிக்கல் நாட்டப்பட்டன. இச்சந்தர்ப்பத்தில் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஷ்தா, 11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சாலிய சேனாரத்ன, இராணுவ பொறியியல் சேவை பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஆர் ஹனேஹொட, 112 படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் ஈ.ஏ.பி எதிரிவீர, 3 ஆவது சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி டப்ள்யூ.ஏ.எம் ரனதிலக போன்ற அதிகாரிகள் இணைந்திருந்தனர்.

இந்த விடுதி கட்டுமான பணிகள் 17 ஆவது பொறியியல் சேவைப் படையணியின் அதிகாரியான மேஜர் ஆர்.எஸ் புஞ்சிஹேவா அவர்களது பூரன தலைமையில் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த நிகழ்விற்கு வருகை தந்த இராணுவ தளபதி அவர்கள் விடுதி அமைக்கும் சுற்றுப்புற பகுதிகளை பார்வையிட்டார்.

3 ஆவது சிங்கப் படையணி தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவ தளபதி அவர்கள் சிவப்பு கம்பளங்கள் விரிக்கப்பட்டு வரவேற்று பின்னர் படையினரால் இராணுவத்தினரால் சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து வரவேற்கப்பட்டார்.

இராணுவ தளபதி அவர்கள் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளுடன் இந்த கட்டிட நிர்மான பணிகள் தொடர்பாக கலந்துரையாடலை மேற்கொண்டு பின்னர் இந்த கட்டுமான பணிகளில் ஈடுபடும் படையினருடன் உரையாடி மிகவிரைவில் இந்த கட்டிட நிர்மான பணிகளை நிறைவு செய்யுமாறும் பரிந்துரைத்தார். மத்திய பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஷ்தா அவர்களின் கரங்களினால் இந்த கட்டிட நிர்மான பணிகள் அமைக்கும் பூமியினால் மம்பெட்டியினால் மன்வெட்டி வேலைத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டன. |