ஜனாதிபதி செயலணி 58 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவிற்கு விஜயம்
13th June 2020
அதிமேதகு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி உறுப்பினர்கள் கொவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக முப்படையினரின் சுகாதார பாதுகாப்பினை கருத்திற் கொண்டு புத்தளத்தில் உள்ள 58 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுத் தலைமையகத்திற்கு வியாழக்கிழமை 11 ஆம் திகதி தங்களது விஜயத்தினை மேற்கொண்டு வளாகத்திலுள்ள அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டனர்.
மார்ஷல் ஒப் எயார் போர்ஷ் மற்றும் மேல் மாகாண ஆளுநருமான ரொஷான் குணதிலக்க அவர்களின் தலைமையில் சென்ற குழுவினரை 58 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.பி.ஐ.பெர்னாண்டோ அவர்கள் வரவேற்றார். மற்றும் அவருக்கு முகாம் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட சுகாதார பாதுகாப்பு தொடர்பாக விளக்கமளித்தார்.
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜயநாத் பெரேரா ,மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுமெத பெரேரா மற்றும் முப்படை சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட ஜனாதிபதி செயலணி உறுப்பினர்கள் அனைத்து படையினரின் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக நாடுபூராகவுமுள்ள இராணுவ படைப் பிரிவுகளுக்கு விஜயத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
விஜயத்தின் பின்னர்,குறித்த உறுப்பினர்கள் இணைந்து முகாம் வளாகங்களின் தரத்தினை எவ்வாறு மேலும் உயர்த்துவது தொடர்பாக கலந்துரையாடினர். விஜயத்தின் இறுதியில் மார்ஷல் ஒப் எயார் போர்ஷ் மற்றும் மேல் மாகாண ஆளுநருமான ரொஷான் குணதிலக்க அவர்கள் அதிதிகள் புத்தகத்தில் சில குறிப்புக்களை எழுதினார். |