மேஜர் ஜெனரல் நிலைக்கு பதவி உயர்வு பெற்ற இருவருக்கு தளபதி சின்னம் அணிவித்தார்

28th May 2020

இராணுவத் தளபதியின் பரிந்துரைக்கு அமைவாக அதிமேதகு ஜனாதிபதியினால் சிரேஸ்ட பிரிகேடியர்கள் ஐந்து பேர் மேஜர் ஜெனரல் நிலைக்கு 2020 மே மாதம் 22 ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் பதவி உயர்த்தப்பட்டனர். அவ்வாறு பதவியுயர்த்தப்பட்டவர்களில் பிரிகேடியர் ஐஎச்எம்என் நிஷாந்த ஹேரத் ஆர்டப்ளியுபி ஆர்எஸ்பி பிஎஸ்சி மற்றும் பிரிகேடியர் டீடி வீரக்கோன் ஆர்டப்ளியுபி ஆர்எஸ்பி யுஎஸ்பி ஆகியோருக்கான அடுத்த நிலைக்கான சின்னத்தினை பாதுகாப்பு தலைமைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களால் ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவ தலைமையக தளபதி காரியலயத்தில் 27ம் திகதி காலை அணுவிக்கப்பட்டது.

இதன் போது இராணுவத் தளபதி அவர்களை வாழ்த்தியதுடன் அவர்களின் புதிய நிலைக்கான சின்னத்தை அணுவித்தார். இது ஒரு வாழ்நாளில் மறக்க முடியா சம்பவமாகும்.

மேஜர் ஜெனரல் ஐஎச்எம்என் நிஷாந்த ஹெராத் தற்போது இராணுவத் தலைமையகத்தில் பயிற்சி பணிப்பாளர் நாயகமாக மிக அர்ப்பணிப்புடன் சேவையாற்றுகின்றார். 1990 ல் போர்க் களத்தில் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி ஊனமுற்ற வீரர்களில் ஒருவர் ஆவார். அவரது இயலாமையையும் பொருட்படுத்தாமல் வன்னி மனிதாபிமான நடவடிக்கையில் 5 வது கள பொறியியலாளர் படைப்பிரிவின் தளபதியாக இருந்து 58 வது படைப்பிரிவு பெரும் நிலப்பரப்பை கைப்பற்றிய போது எல்.ரீ.ரீ.ஈ யினால் முழுமையாக தூண்டித்திருந்த விநியோக பாதைகளை இணைப்பதிலும் வெடிப்பொருள் சாதனங்களை அகற்றுவதிலும் படையினருடன் முன்னின்று செயற்பட்டவர்.

2006 களில் எல்.ரீ.ரீ.ஈ யின் தற்கொலை மற்றும் வான்வழித் தாக்குதல்களின் போது கொழும்பு பாதுகாப்பு தலைமையகத்தின் பொதுப் பணி அதிகாரி 1 ஆக செயற்பட்டார். 02 வருடங்கள் 621 வது படை தளபதியாகவும் நடவடிக்கை பணிப்பகத்தின் கேணல் பொது பணியாகவும் மேலும் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். ஊனமுற்ற அதிகாரியாக இராணுவ கட்டளைகள் மற்றும் பணியாளர் கல்லூரி பாடநெறியில் தேர்ச்சி பெற்ற அவர், பொறியியலாளர் பயிற்சி பாடசாலையின் நிறைவேற்று அதிகாரியாகவும் ,கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தலைமை பயிற்றுனராகவும் இராணுவ கட்டளைகள் மற்றும் பணியாளர் கல்லூரி பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் இராணுவத்தின் பன்னாட்டு பயிற்சியின் முன்னாள் பிரதி பணிப்பாராகவும் பொறியியலாளர் படையணி தளபதியாகவும் இராணுவ கட்டளைகள் மற்றும் பயிற்சியின் பிரிகேடியர் பயிற்சியாகவும் (09.04.2018 முதல் 12.11.2019 )செயற்பட்டுள்ளார். களனி மற்றும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பாதுகாப்பு ஆய்வுகள் தொடர்பாக முதுமானி பெற்றவர். 2019 நவம்பர் 13 திகதி முதல் இராணுவ தலைமையகத்தில் பயிற்சிப் பணிப்பாளராக பொறுப்பேற்றார்.

இலங்கை இலேசாயுத படையணியின் மேஜர் ஜெனரல் டீடி வீரக்கோன் 1986 ஜுன் மாதம் 2ம் திகதி இராணுவத்தில் இணைந்துக் கொண்டு 1987 ம் ஆண்டு ஆணையதிகாரம் பெற்றார். 2007-2009 காலப்பகுதியில் 6 வது இலேசாயுத படை கட்டளை அதிகாரியாகவும் 233 (2009 – 2011) 622 (2014 – 2016 ) 523 ( 2018 – 2019) படைகளின் தளபதியாகவும் முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் பிரிகேடியர் பொது பணியாக (2019 – 2020) இவ்வருடம் தொடக்கத்தில் சொத்து முகாமைத்துவ பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். |