இராணுவ தலைமையகம் மற்றும் தலைமையகத்தின் பிரதான கட்டிடங்கள், அதனை அண்மித்த வீதியோகரங்களில் கிறிஸ்மஸ் அலங்காரம்

24th December 2021

இலங்கையின் சமய மற்றும் கலாசார பன்முகத்தன்மைக்கு அர்த்தம் சேர்க்கும் வகையிலும் நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தின் பிணைப்புகளை மேலும் வலுவூட்டும் வகையிலும் இராணுவ தலைமையக படையினரால் 'அமைதியின் இளவரசர்' இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் வகையில் கண்கவரும் வகையில் இராணுவ தலைமையக வளாகம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள் மின்னொளியூட்டி அலங்கரிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் இலங்கை மின்னியல் மற்றும் இயந்திர பொறிமுறை படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் இந்து சமரகோன் அவர்களின் அழைப்பின் பேரில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு முன்பாகவிருக்கு இராணுவ தலைமையக வளாகத்திற்குள் பிரவேசிப்பதற்கான சந்தியில் இன்று மாலை (23) மாலை 6.00 மணிக்கு வருகை தந்திருந்ததோடு, வீதியின் ஔியூட்டப்பட்ட அலங்கார தொகுதியை திறந்து வைத்தார். இதற்கு இணையாக இராணுவ இசை மற்றும் அரங்கியல் பணிப்பகத்தின் ஏற்பாட்டில் மின்னொளிகளுக்கு மத்தியில் கிறிஸ்மஸ் கரோல் கீதங்கள் இசைக்கும் நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.

இந்நிகழ்வின் போது “பகிர்வு மற்றும் அன்பு” உள்ளிட்ட பண்புகளை மேம்படுத்தும் வண்ணமான இராணுவ தளபதியவர்களால் இராணுவ குடும்பங்களை சேர்ந்த 50 சிறுவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் இராணுவ பதவி நிலை பிரதானி, இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி, இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டதோடு, கைவண்ணங்கள் மற்றும் தொட்டில்கள் மீதான அலங்காரம் மற்றும் மின்னொளி அலங்காரங்களை பார்வையிட்டனர். வெசாக், கிறிஸ்மஸ் மற்றும் ஏனைய மதம் சார்ந்த தேசிய மற்றும் கலாசார ரீதியான நிகழ்வுகளுக்கு உலகளாவிய ரீதியில் வழங்கப்படும் முக்கியத்துவத்தை அங்கிகரிக்கும் வகையில் மேற்படி நிகழ்வுகள் ஸ்ரீ ஜயவர்தனபுரவிலுள்ள இராணுவ தலைமையகத்திலும் கொண்டாடப்படுகின்றன.