இதுவரையில் 3721 தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் வீடு செல்லல்-நொப்கோ தலைவர் தெரிவிப்பு

17th April 2020

கோவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் காணொளி கிளிப் 16 ஆம் திகதி மாலை ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.

“கடந்த சில நாட்களில் , ஜாஎல-சீதுவெல்ல பகுதிகளில் பல கோவிட்-19 தொற்றுக்குள்ளான நபர்கள் இனங்காணப்பட்டனர். அவ்வாறு தொற்றுக்குள்ளான கிரேன்பாஸ், நாகலகம் வீதியில் உள்ள நபர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய 118 நபர்கள் சாம்பூர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர். இப்பரவலை மேலும் கட்டுப்படுத்துவதற்காக நாகலகம் வீதியானது 16 ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

பணிச்சங்கேணி தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட20 நபர்கள் பிசிஆர் பரிசோதனையின் பின்னர் இன்று காலை (16) ஆம் திகதி தங்களது வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

தற்பொழுது, முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் 1631 நபர்கள் தனிமைப்படுத்தல்களில் உள்ளதுடன், முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து இதுவரை 3721 நபர்கள் தங்களது வீடுகளுக்குச் சென்றுள்ளனர். இன்று 80 பிசிஆர் பரிசோதனை பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றன, அதில் எவறுக்குமே நோய் தொற்’று ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த நபர்கள் சுகாதார நடைமுறைகளுக்கு பின்னர் தங்களது வீடுகளுக்கு அனுப்பப்படவுள்ளனர்.

அதற்கு மேலதிகமாக,வைத்தியர்கள் மற்றும் தாதி குழாம் வைக்காள் டொல்பின் ஹோட்டலில் தனிமைப்படுத்தலில்தொடர்ந்தும் உள்ளனர். அங்கு தனிமைப்படுத்தல் செயற்பாடுகளில் இருந்த மற்றுமொறு குழுவினர் தங்களது தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவு செய்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

காணொளியின் முழு விபரம் பின்வருமாறு |