இராணுவ தளபதியினால் முல்லைத்தீவு,கிளிநொச்சி மற்றும் யாழ் படையினரின் அர்பணிப்பினை பாராட்டலும் அவர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்தலும்

12th April 2020

"முழு உலகமும் இந்த தொற்று நோயினால் அச்சுறுத்தலுக்கு உள்ளான போது எங்கள் வரலாற்றின் இந்த முக்கியமான கட்டத்தில் நீங்கள் அர்ப்பணித்த மற்றும் விலைமதிப்பற்ற சேவைகளானது ஜனாதிபதி, கௌரவ பிரதமர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் அனைத்து இலங்கையர்களினாலும் பெரிதும் போற்றப்படுகிறன. எங்கள் மீது நம்பிக்கை வைத்து, முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி, என்னை கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவராக நியமித்து, இந்த சவாலான பணியை தேசத்தின் இருப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளான போதெல்லாம் அதைப் பாதுகாத்த இலங்கை இராணுவத்திடம் ஒப்படைத்தார் ‘ சாத்தியமற்றது எதுவுமில்லை’ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இராணுவமாகிய நாங்கள் எங்கள் பங்கைச் சிறப்பாகச் செய்து வருகின்றோம். நம் நாட்டைப் பாதுகாப்பாக வைப்பதில் நம் அனைவருக்கும் பொறுப்பான பங்கு உண்டு. இப்போது நம் வாழ்க்கை மாறிவிட்டாலும், இந்த புத்தாண்டு பருவத்தில் நம்முடைய நெருங்கிய மற்றும் அன்பானவர்களுடன் நாம் ஒன்றுகூட முடியாது என்றாலும், நாம் நன்றாக நடந்துகொள்வதன் மூலமும் மற்ற அனைவரையும் ஆரோக்கியமாக இருக்க அனுமதிப்பதன் மூலம் நாம் நிச்சயமாக நாட்டின் பெருமைமிக்க குடிமகனாக இருக்க முடியும். நாட்டின் நலன்பேண, நீங்கள் ஆரோக்கியமாக இருப்பது அவசியம், எனவே கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களின்படி உங்கள் அனைவருக்கும் கோவிட்-19 பரவுவதற்கு எதிராக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியது அவசியம், ”என்று பாதுகாப்புத் தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தனது புத்தாண்டு உரையின்போது முல்லைத்தீவு கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தின் கீழ்சேவைபுரியும் படையினர் மத்தியில் 12 ஆம் திகதி தனது விஜயத்தின்போது உரையாற்றினார்.

லெப்டினன் ஜெனரல் சில்வா சனிக்கிழமை (11) ஆம் திகதி 54 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவில் உள்ள மன்னார் படையினரை பார்வையிட்டதோடு, புத்தளத்தைச் சேர்ந்த கோவிட்-19 நோய்த் தொற்றுக்குள்ளான ஒருவர் தரவிக்குளம் கிராமத்துடன் நெருங்கி தொடர்பினை பேணியதனால் அக்கிராமத்தை சேர்ந்த 4000 க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் தனிமைப்படுத்தப்பட்டனர். குறித்த தரவிக்குளம் கிராமத்தை பார்வையிட்டதன் மூலம் தனது கிராமப்புற பயணத்தை தொடங்கினார். மன்னாரில் தங்கியிருந்த போது, வீதித் தடைகள், தலைமையகம், படைப்பிரிவுகள் மற்றும் பிரிகேட் பிரிவுகளில் உள்ள நூற்றுக்கணக்கான படையினருடன் பேசினார், அவர்களுடன் புத்தாண்டு உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார். (தனி கதையைப் பார்க்கவும்). கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள படையினரை சந்திப்பதற்கு முன்னர் அவர் முல்லைத்தீவிற்கு சென்றார்.

தனது விஜயத்தின் போது அதிகபட்ச எண்ணிக்கையிலான படையினர்களிடம் உரையாற்றிய இராணுவத் தளபதி, வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள A 9 வீதி மற்றும் ஏனைய வீதித் தடைகளை நிர்வகிக்கும் படையினருடன் வார்த்தையைப் பகிர்ந்து கொண்டார். பாதுகாப்புப் படைத் தலைமையகம் பிரிவு தலைமையகம், படைப்பிரிவு தலைமையகம் மற்றும் இன்னும் சில படை பிரிவுகளில் சேவை செய்யும் படையினர் மத்தியில் தளபதி உரையாற்றினார்.அங்கு அவர் வரவிருக்கும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு, அவர்களின் அர்ப்பணிப்பு கடின உழைப்பை அவர் மிகவும் பாராட்டினார்.

"இந்த முறை புத்தாண்டை நாம் நினைவுகூர முடியாது என்றாலும், இந்த முக்கியமான தருணத்தில் உங்கள் தீர்க்கமான தேசிய பங்கு விலைமதிப்பற்றது மற்றும் நமது சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த கோவிட்.-19 தொற்றுநோயின் தொடக்கத்தை நான் உங்களுக்கு நினைவூட்டினால், இத்தாலி, ஈராக், ஈரான் மற்றும் தென் கொரியாவிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட செயலாக்கத்திற்காக திரும்பிய வெளிநாட்டு வதிவிட இலங்கையர்களுக்கான இரண்டு தனிமை மையங்களை இலங்கை இராணுவம் முதன்முதலில் நிறுவியது. ய நிலவரப்படி ஆனால் இன்றை நாங்கள் கிட்டத்தட்ட 50 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை நிறுவியுள்ளோம், அவற்றில் சில கடற்படை மற்றும் விமானப்படையால் நிர்வகிக்கப்படுகின்றன.இந்த முக்கியமான தருணத்தில் நீங்கள் அனைவரும் செய்த கடின உழைப்பால் இந்த இலக்குகளை மிகக் குறுகிய காலத்திற்குள் அடைந்துள்ளோம்., இந்த தொற்றுநோய் இப்போது நூற்றுக்கணக்கான நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது எனவே உங்களுடைய இந்த சேவைக்காக இலங்கை இராணுவ வைத்தி சேவைப் படையணி, ஏனைய காலாட் படையணி,பொறியியல்சேவைப் படையணி, இலங்கைபோர்க்கருவி படையணி,இலங்கை இராணுவ சேவைப் படையணி உள்ளிட்ட பல படைணிகள் .. நன்றியுடன் பாராட்டப்பட வேண்டும் மற்றும் மிகவும் பாராட்டப்பட வேண்டும். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை தங்கள் பணிகளை பாராட்டத்தக்க வகையில் செய்து வருகிறது இதற்காக அதிமேதகு ஜனாதிபதி,கௌரவ பிரதமர், பாதுகாப்பு செயலாளர்,முப்படையினர்,சுகாதார அமைச்சு, அரசு மற்றும் ஊடகங்கள் நாட்டை காப்பாற்றுவதற்காக வழங்கிய அவர்கள் இன்னும் ஒத்துழைத்துக்கொண்டிருக்கின்றார்கள். எனவே எங்களது நாட்டின் சார்பாக அவர்கள் அனைவருக்கும் நான நன்றியினை தெரிவிக்க விரும்புகின்றேன். முதல் கோவிட் -19 பாதிக்கப்பட்டவரைக் கண்டறிந்த ஐந்தாவது வாரத்தை நாங்கள் கடந்து செல்கிறோம், அந்த விளைவுக்கு நாம் அடைந்த முன்னேற்றத்தில் நாங்கள் இன்னும் திருப்தியடைய முடியும், ”என்று தளபதி சுட்டிக்காட்டினார்.

புத்தாண்டு நிகழ்விற்கு வலிமை சேர்க்கு முகமாக ‘மனுச தெரன’ சமூக திட்டத்தினூடாக 552 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைளினருக்கு புத்தாண்டு பரிசுப் பொதிகளை வழங்குவதற்காக இராணுவத் தளபதி அழைக்கப்பட்டார்.

முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள பாதுகாப்புப் படைத் தலைமையகங்களுக்கு அவர் சென்றதோடு, 64 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவு, 52 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவு, 574 ஆவது பாதுகாப்பு படைப்பிரிவு மற்றும் 552 ஆவது பாதுகாப்பு படைப்பிரிவுகளில் சேவையாற்றும் படையினர்களுடன் உரையாடினார், அங்கு அவர் ஏற்கனவே குறிப்பிட்ட விடயங்களையே பேசினார் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்துடன் அவரது இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

அதேபோல், பாதுகாப்பு தலைமை பிரதானியான லெப்டினன் ஜெனரல் சில்வா அவர்கள் வடக்கு கடற்படை கட்டளை மற்றும் பாலாலியில் உள்ள விமானப்படை தளத்தில் உள்ள அனைத்து படையினரை சந்தித்து அவர்களிடம் உரையாடினார். முதலில், அவர் ‘உத்தர’ என்ற கடற்படைக் கப்பலில் இருந்த படையினரை சந்தித்து, புத்தாண்டு விடியற்காலையில் அவர்ளிடம் உரையாற்றினார், பின்னர் புதிதாக கட்டப்பட்ட கப்பலைப் பார்வையிட்டார். இந்த இடத்திற்கு வந்தபோது அவரை கடற்படை பிரதி பதவிநிலை பிரதானியும் , பிரதேசத்தின் தளபதியுமான ரியர் அட்மிரல் எஸ்.எம்.டி.கே.சமரவீர அவர்கள் அன்புடன் வரவேற்றார். சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர் பாலாலியில் உள்ள விமானப்படை தளத்தை சென்று பார்வையிட்டதோடு, அங்குள்ள விமானப்படையினருடன் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டீப்தி ஜயதிலக, கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன, யாழ் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய, பாதுகாப்பு படைப் பிரிவுகளின் படைத் தளபதிகள்,பிரிகேட் கட்டளைத் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட பலர் வடக்கு மாகாணத்தில் இராணுவத் தளபதியுடன் இணைந்திருந்தனர். |