அனைத்து வெளிநாட்டவர்களும் முப்படை மற்றும் சுகாதார அதிகாரிகளை பாராட்டிவிட்டு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து வெளியேற்றம்
2nd April 2020
ராஜகிரியவிலுள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்புப் தலைமை பிரதானியும் , இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும்சட்ட வழக்கறிஞ்சரும்,பிரதி பொலிஸ் மாஅதிபருமாகிய அஜித் ரோகன அவர்களது தலைமையில் இன்று (2) ஆம் திகதி ஊடக சந்திப்பு மகாநாடு இடம்பெற்றது.
இந்த ஊடக சந்திப்பில் இராணுவ தளபதியவர்கள் கருத்து தெரிவிக்கையில் இரண்டு வார கால தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கையின் பின்புதியதலாவை, ரன்டெம்பே மற்றும் பாம்பைமடு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து மொத்தம் 187 பேர்கள்தனிமைப்படுத்தப்பட்ட குணசான்றிதழ்கள் பின்பு இன்று (2) ஆம் திகதிதங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அத்துடன் இது வரைக்கும் முப்படையினரால் நிருவாகித்து வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்துமொத்தமாக2308 பேர் பூரன குணசான்றிதழ்களுடன் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் 15 வெளிநாடுகளைச் சேர்ந்த 31 வெளிநாட்டவரும் இன்றைய தினம் இந்த தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து வெளியேறிச் சென்றனர். என்று அவர் தெரிவித்தார்.
அதே போல் கோவிட் – 19 கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகியிருக்கலாம் எனும் சந்தேசத்தின் பேரில் 226 பேருவளை பகுதிகளிலிருந்து உளவுத்துறை மற்றும் சுகாதார அதிகாரிகளினால் கண்டு பிடிக்கப்பட்டு நேற்று முதலாம் திகதி இராணுவத்தினரால் புனானை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அதே போல் 30 நபர்கள் புத்தளம் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இலங்கையிலுள்ள 40 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில 1683 பேர்கள் தங்கியுள்ளனர். மேலும் கொரோனா நோயினால் மரணமடைந்தவர்களுடன் தொடர்பு வைத்து நெருங்கி பழகியவர் 300 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் வைத்து பரிசோதனை பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலுள்ள 312 பேர் அவர்களது இருவார கால பரிசோதனைகளின் பின் நாளைய தினம் (3) ஆம் திகதி அவர்களது வீடுகளுக்கு அழைத்து செல்லவுள்ளனர்.
மேலும் இன்றைய தினம் எமது நாட்டில் அமுல்படுத்தியிருக்கும் ஊரங்க சட்டத்தை கடைப்பிடிக்கும் நோக்கத்துடன் (2) ஆம் திகதி முப்படையினர் மற்றும் கிராம சேவக உத்தியோகத்தரது ஒத்துழைப்புடன் ஓய்வூதியம் பெருபவர்களுக்கு விஷேட சலுகைத் திட்டத்தின் கீழ் வாகன போக்குவரத்து வசதிகளுடன் ஓய்வூதியங்களை பெருவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. அத்துடன் இவர்களுக்கு மருந்துகளை பெற்றுக் கொள்வதற்காக போக்குவரத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன என்று இராணுவ தளபதி வலியுறுத்தினார்.
இந்த ஊடக மகாநாட்டில் சட்ட வழங்கறிஞ்சரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோகன கருத்து தெரிவிக்கையில் சமூக வலைத்தலையங்களில் தீங்கிழைக்கும் வகையில் தவறான செய்திகளை வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அத்துடன் கொழும்பு லேடி ரிட்ச்வே வைத்தியசாலையில் 40 குழந்தைகளுக்கு கொரோன தொற்று நோய் பரவியுள்ளதாக வெளியிடப்பட்டிருக்கும் செய்திகள் போலியானதென்றும் ஊடகங்களுக்கும் தெரிவித்தார். மேலும் கடந்த 24 மணித்தியாலத்தினுள் நாட்டில் ஊரடங்க சட்ட உத்தரவை மீறியவர்கள் 1017 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று சுட்டிக் காட்டினார். |