கோவிட்-19 வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க இராணுவமானது தனது அனைத்து வளங்களையும் பயன்படுத்துகிறது என இராணுவத் தளபதி தெரிவிப்பு

14th March 2020

‘தெரன தொலைக்காட்சியில் வியாழக்கிழமை 12 ஆம் திகதி மாலை ‘அலுத் பார்லிமெந்துவ’ நிகழ்வில் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில், உயிராபத்தினை ஏற்படுத்தக்கூடிய கோவிட்-19 வைரஸ் இலங்கையில் பரவுவதை தடுக்க முப்படைகள் தங்களது ஒத்துழைப்புகளை எந்நேரமும் வழங்க தயார் நிலையில் உள்ளது என்று குறிப்பிட்டார்.

‘காடுகளில் உள்ள சதுப்பு நிலங்கள், கற்பாறைகள் மற்றும் மரங்களின் கீழ் சிரமப்பட்டு தனது தியாகத்தை செய்த இராணுவத்திற்கு நாடானது அச்ச சூழ்நிலையில் காணப்படும்போது இப்பிரச்சினைகளை எதிர்கொள்வது ஒருபொருட்டள்ள என மேலும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.

‘இராணுவத்தினரால் பயன்படுத்தப்படும் 2000 கட்டில்கள், 4000 மெத்தைகள்,4000 தலையணைகள், மெத்தை விரிப்புகள் உள்ளிட்ட பல உபகரணங்கள் குறித்த மருத்துவ பரிசோதனை நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அறைவாசி வெட்டப்பட்ட பிலாஸ்டிக் போத்தல்கலில் காபி கொடுக்கும் இராணுவம் நாங்கள் அல்ல. எங்களுடைய குறைந்தளவான பொருளாதாரத்தை வைத்து எங்களால் இயலுமான ஒத்துழைப்பை மருத்துவ பரிசோதனை நிலையங்களுக்கு அழைத்து செல்லப்படும் இலங்கையர்களுக்கு வழங்குவோம். தற்பொழுது உரங்கும் போது தலையணைகளை பயன்படுத்தும் நாங்கள், காடுகளில் சதுப்பு நிலங்கள், கற்பாறைகள் மற்றும் மரங்களின் கீழ் நாட்கள் மற்றும் வாரங்களாக சிரமப்பட்டு இராணுவத்தினர் உரங்கினர் என மேலும் லெப்டினன் ஜெனரல் தெரிவித்தார்.

‘‘’நாங்கள் எப்பொழுதும் உண்மையினை பேசுபவர்கள். நீங்கள் எங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் மற்றும் நாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை ஒரு போதும் மீறமாட்டோம். இது உலகளாவிய அச்சுறுத்தலாக இருக்கும் இந்த உயிருக்கு ஆபத்தான தொற்றுநோய்க்கு எதிராக நாங்கள் ஒரு குடும்பமாக செயற்படும் முக்கியமான தருணம் இது”என்று இராணுவத் தளபதி வலியுறுத்தினார்.

‘சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி, ஜனாதிபதி வெளிவிவகார மேலதிக செயலாளர் பேராசிரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே, பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அணில் ஜசிங்க மற்றும் ஜனாதிபதி ஊடக பிரிவின் தலைவர் திரு மொஹான் சமரநாயக்க ஆகியோர் கோவிட்-19 வைரஸ் தொற்று நோய் பரவுதல் மற்றும் அதனை தடுப்பது தொடர்பாக நேர்காணலில் ஈடுபட்டனர்.

‘இதில் இலங்கையின் தயார்நிலை, தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை, தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அதன் பரவுதல் பற்றிய பொதுமக்களுக்கான விழிப்புணர்வு தொடர்பாக கலந்துறையாடப்பட்டன.

‘தெரன தொலைக்காட்சியில் இடம்பெற்ற நேரடி காணொளி பின்வருமாறு. |