புதிய இராணுவ பயிற்சி கல்லூரி தளபதியின் பதவி பொறுப்பேற்பு

23rd December 2019

இராணுவ பயிற்சி கல்லூரியின் 36ஆவது புதிய தளபதியாக பிரிகேடியர் ஜகத் கொடிதுவக்கு தனது கடமையினை 21 ஆம் திகதி மாதுரு ஓயாவில் வைத்து பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதிதாக நியமிக்கப்பட்ட தளபதியவர்கள் இராணுவ மரியாதையளிக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து தளபதியவர்கள் செத் பிரித் மத நிகழ்வுகளுக்கு மத்தியில் தனது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் பிரிகேடியர் சிசிர பிலப்பிட்டிய அவர்களுக்கு பதிலாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். |