மேஜர் ஜெனரல் கஸ்தூரியாராச்சி இராணுவ தளபதியை சந்திப்பு
30th November 2019
இலங்கை இராணுவ பீரங்கி படையணியின் மேஜர் ஜெனரல் எல்.எஃப். கஸ்தூரியாராச்சி அவர்கள் இராணுவத்திற்கும் நாட்டிற்கும் தனது சேவையை வழங்கியதுடன் ஓய்வுபெற்று செல்வதற்கு முன்னர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை 28 ஆம் திகதி வியாழக்கிழமை ஸ்ரீ ஜெயவர்தனபுரயில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.
இருவருக்கும் இடையிலான இந்த சந்திப்பில், இராணுவத் தளபதி மற்றும் ஓய்வு பெற்று செல்லும் அதிகாரி தனது எதிர்காலத் திட்டங்கள் மற்றும் வேறு திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடின.
சந்திப்பின் இறுதியில் இராணுவ தளபதி தனது பாராட்டுக்கு அடையாளமாக ஓய்வு பெற்று செல்லும் மேஜர் ஜெனரல் கஸ்தூரியராச்சிக்கு சிறப்பான நினைவுச் சின்னம் வழங்கினார். நினைவு சின்னத்தை பெற்றுக் கொண்ட இவர் இராணுவ தளபதிக்கு தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். இவர் இலங்கை இராணுவ தொண்டர் படையணியில் பிரதி கட்டளை தளபதியாக சேவையாற்றினார் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.
மேஜர் ஜெனரல் கஸ்தூரியராச்சி அவர்கள் இலங்கை இராணுவ தொண்டர் படையணியில் 1983 ஆம் ஆண்டு பெப்பவரி 14 ஆம் திகதி இணைந்து கொண்ட இவர் இராணுவ தொண்டர் படையணியில் பல நியமனங்களை பெற்றுள்ளார். |