புதிய ஆறு தேடுதல் கண்டுபிடிப்புகள் இராணுவத்திற்கு வழங்கல்

10th November 2019

பாதுகாப்பு அமைச்சின் தேடுதல் மற்றும் அபிவிருத்தி பணிப்பகத்தால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ கண்டுபிடிப்புகளின் புதிய ஆறு ஆக்கப்பாட்டு கண்டுபிடிப்புகள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா போன்றோரின் தலைமையில் வியாழக் கிழமை (05) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந் நிகழ்வானது பாதுகாப்பு அமைச்சில் இடம் பெற்ற இதன் போது பாதுகாப்பு செயலாளர் இராணுவத் தளபதியவர்கள் தேடுதல் மற்றும் அபிவிருத்தி நிலைய பணிப்பாளர் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.

இதன் போது காணப்பட்ட கண்டுபிடிப்பு பொருட்களானது பீடிஆர் 80 சிமுலேடர் இலேசான வாகன சிமுலேடர் 81 எம்எம் மோட்டர் சிமுலேடர் சிஈ எப்ஆர்ஏடீ 2019 தொலைபேசி நேரடி துப்பாக்கி பிரயோக தளம் பரட்ரூபர் பயிற்சி சிமுலேடர் மற்றும் உயர் தொழில்நுட்ப படையினர் மென்பொருள் போன்ற பொருட்கள் காணப்பட்டது.

மேலும் இப் புதிய கண்டுபிடிப்பு பொருட்களானது இலங்கை இராணுவத்தின் அதிகாரிகள் மற்றும் படையினர்களின் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் கடந்த 1முதல் 2வருடங்கள் வரை மேற்கொள்ளப்பட்ட இக் கண்டுபிடிப்பானது தற்போது வெற்றியடைந்துள்ளது.

அந்த வகையில் தேடுதல் மற்றும் அபிவிருத்தி பணிப்பக பணிப்பாளரான பிரிகேடியர் வைத்தியர் திரான் டி சில்வா அவர்களின் வழிகாட்டலின் கீழ் தேடுதல் மற்றும் அபிவிருத்தி பணிப்பகத்தால் புதிய கண்டுபிடிப்புகள் கடந்த ஐந்து வருடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு முப்படையினரின் தேவைக்காக வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இத் தேடுதல் அடிப்படையிலான தொழில்நுட்ப பொருட்களானது தற்போது இலங்கை படையினரிரையே பாரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இச் சந்திப்பின் போது தேடுதல் மற்றும் அபிவிருத்தி பணிப்பகத்தின் தளபதியவர்யான வைத்தியர் சில்வா அவர்கள் குறைந்த முதலீட்டில் செய்யப்பட்ட இப் பொருட்கள் சர்வதேச சந்தைப்படுதலில் உயர்தர பாதுகாப்பு பொருட்களாக காணப்படுவதுடன் இராணுவத்தினரின் சிறந்ததோர் ஆக்கப் படைப்பாகவும் இது காணப்படுகின்றது.

மேலும் இதன் போது காண்பிக்கப்பட்ட கண்டுபிடுப்பு பணிப்பத்தின் பணிப்பாளர் அவர்களுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்த பாதுகாப்பு செயலாளரவர்கள் தமது திறமைகளை இப் பணிப்பகத்தினருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்தார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் இராணுவமானது தமது பயிற்சிகளுக்காக இவற்றை பயன்படுத்தலாம் எனவும் இதன் மூலம் நாட்டிற்கு பாரிய அளவிலான முதலீட்டுத் தொகை கிடைக்கப் பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதன் போது இராணுவத் தளபதியவர்களும் இப் பணிப்பகத்தின் பணிப்பாளரவர்களுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்தார். அத்துடன் இலங்கை இராணுவத்தின் இப் பணிப்பக கண்டுபிடிப்பாளர்களின் எதிர்காலத்திற்கான வாழ்த்துக்களையும் அவர் மேலும் தெரிவித்தார். |