திஸ்ஸ விகாரையில் புதிய தூபிக்கு இராணுவ தளபதி அடிக்கல் நாட்டினார்
30th January 2021
காங்கேசன் துறையிலுள்ள வரலாற்று சிறப்பு மிக்க திஸ்ஸ மகா விகாரையில் தூபியை நிர்மாணிப்பத்கான அடிக்கல் நாட்டும் விழா மகா சங்கத்தினரின் அனுசரணையுடன் யாழ்ப்பாண பாதுகாப்பு படையினர், விமான படையினர், கடற்படையினர் மற்றும் பொலிஸாரின் பங்கேற்புடன் இன்று (30) காலை நடைபெற்றது.
யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களின் அழைப்பின் பேரில், பிரதம அதிதியாக கலந்துகொண்ட பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் இந்த நிர்மாணப் பணிக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
கி.மு 250-210 காலப்பகுதியில் தேவநம்பியதீசன் ஆட்சிக்காலத்தின் போது ஜம்புதீபவிலிநுந்து தம்பக்கொல பட்டுனவை வந்தடைந்த பிக்குனி சங்கமித்தா .பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அனுராதபுரத்திற்கு பயணித்த வழியில் இழைப்பாரிய பகுதி என்ற வரலாற்றுச் சிறப்பும் இந்த விகாரைக்கு உள்ளது.
100 அடி உயரமான இந்த தூபியின் கட்டுமானத்தை மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் கட்டிடக்கலைப் பீடம் வடிவமைத்துள்ளதுடன், இந்த கட்டுமானத்துக்காக மேலதிக தொழில்நுட்ப நிபுணத்துவ தெரிவை பேராசிரியர் சமித்த மானவடு மற்றும் பேராசிரியர் நிமால் டி சில்வா ஆகியோரினால் வழங்கப்பட்டது.
அதன்படி இந்த இரண்டு கட்டுமானங்கள் யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 5 வது பொறியியல் படையினரால் நிர்மாணிக்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலமாக இந்த விகாரைக்கு யாழ்ப்பாண படைப்பிரிவு தளபதிகளின் அறிவுறுத்தலின் பேரில் படையினரால் வழங்கப்பட்ட ஒத்துழைப்புடன் 67 வருடங்களுக்கு பின்னர் 2019 அந்த விகாரையில் ‘கட்டின பூஜை’ நடத்தப்பட்டது.
அதேநேரம் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியாக சேவையாற்றிய மேஜர் ஜெனரல் செனரத் பண்டாரா இராணுவ தலைமையகத்தில் இராணுவ பதவி நிலை பிரதானியாக நியமிக்கப்படும் முன்பாக, இராஜாங்க அமைச்சர் கௌரவ சரத் வீரசேகர மற்றும் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்த ஆகியோரின் ஒத்துழைப்புடன் வரலாற்று சிறப்புமிக்க இந்த விகாரைக்கு பெரிய சிலையொன்றினை வழங்கி அதன் வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்தார்.
அதேபோல் இந்த கட்டுமானத்துக்கான ஆரம்பத் திட்டமும் மேஜர் ஜெனரல் செனரத் பண்டாராவால் முன்மொழியப்பட்டிருந்தது என்பதும் யாழ் பாதுகாப்பு படையின் தற்போதைய தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் மேற்பார்வையின் கீழ் இத்திட்டம் நிறைவேற்றப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த அடிக்கல் நாட்டு விழாவின் போது இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் முதலாவது அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டதுடன், இதன்போது கண்டி அஸ்கிரிய பீடத்தின் வண. நாராம்பனாவே ஆனந்த தேரர் தலைமையில் மகா சங்கத்தினர் பிரித் பாராயணங்ளையும் செய்தனர்.
அதனையடுத்து இத்திட்டத்தின் முன்னோடிகளான இராணுவ பதவி நிலை பிரதானி , யாழ் பாதுகாப்பு படைத் தளபதி , பேராசிரியர். சமித மானவடு, பேராசிரியர் நிமல் டி சில்வா, திருமதி துஷாரா தேனுவர, ஆகியோரும் அடிக்கல்களை நாட்டிவைத்தனர்.
இந்த தூபியை நிர்மாணிக்கும் பணிகளுக்காக புத்தசாசன சமயங்கள் மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு நிதி ஒதுக்கியுள்ளதுடன், உள்நாட்டு,வெளிநாட்டு நன்கொடையாளர்கள் நிதி வழங்கி பங்களிப்பு செய்யவுள்ளனர்.
அதேநேரம் கட்டுமான பணிகளின் போதான ஒருங்கிணைப்புச் செயற்பாடுகள் வடக்கு முன்னரங்கு பாதுகாப்பு பிரதேச தளபதி பிரிகேடியர் வந்தித மஹிங்கந்த , 5 வது இலங்கை இராணுவச் சேவைப் படைணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஆர். பண்டிதரத்ன மற்றும் தன்னார்வலர் திருமதி துஷாரா தேனுவர ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பின்னர் ஜெனரல் ஷவேந்திர சில்வாவால் நிகழ்வில் பங்கேற்ற மகா சங்கத்தினருக்கு தானம் வழங்கப்பட்டதுடன், அவர்களிடமிருந்து ஆலோசணைகளையும் பெற்றுக்கொண்டார்.
குறித்த நிகழ்வில் யாழ்பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப் பதவி நிலை அதிகாரி, பிரிகேட் தளபதிகள், கடற்படை, விமானப்படை,பொலிஸ், விஷேட பொலிஸ் அதிரடிப்படை மற்றும் படையினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். |