மின்னேரிய 'காலாட்படை இல்லத்தில்’ புதிய நுழைவாயிற் சுவர் திறத்தலும் & மா மரக்கன்றுகள் நடுவு செய்தலும்

24th October 2020

மின்னேரிய காலாட்படை பயிற்சி மையத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சம்பக ரணசிங்க அவர்களின் அழைப்பின் பேரில், இராணுவத்தின் 'காலாட்படை இல்லமான மினேரியாவில் உள்ள காலாட்படை பயிற்சி மையத்தின் புதிய நுழைவாயிற் சுவரானது சனிக்கிழமை (24) ஆம் திகதி பாதுகாப்புத் தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அங்கு விஜயத்தினை மேற்கொண்ட இராணுவத் தளபதியை பயிற்சி மையத்தின் தளபதி வரவேற்றதுடன் அவருக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி நிரலில் முதல் கட்டமாக , இராணுவ பொறியாளர்கள் மற்றும் காலாட்படை பயிற்சி மையத்தின் படையினரின் தொழில்நுட்ப ஒத்துழைப்போது நிர்மாணிக்கப்பட்ட புதிய நுழைவு வாயிலினை கைத்தட்டல்களுக்கு மத்தியில் இராணுவத் தளபதி திறந்து வைத்தார்.

பின்னர், அன்றைய பிரதம அதிதியவர்கள் முன்மொழியப்பட்ட மற்றும் நடந்துகொண்டிருக்கும் உட்புற விளையாட்டு வளாகத்துடன் இணைக்கப்பட்டுள்ள காலாட்படை பயிற்சி மையம் மற்றும் பாதுகாப்பு சென்ட்ரி வளாகத்தைச் சுற்றியுள்ள கட்டுமானத் திட்டங்களைக் பார்வையிட அழைக்கப்பட்டார்.

தளபதியின் 'துரு மிதுரு-நவ ரத்தக்' கருத்தாக்கத்தின் ஒரு நிகழ்சியாக காலாட்படை பயிற்சி மைய வளாகத்தினை சுற்றி 1000 மா மரக்கன்றுகளை அனைத்து அதிகாரிகளும் ஏனைய இராணுவ சிப்பாய்களும் லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுடன் ஒன்றாக சேர்ந்து அந்த மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

அன்றைய பயணம் முடிவதற்குள், அவர் காலாட்படை பயிற்சி மையத்திலுள்ள உள்ள அதிகாரிகள் மத்தியில் உரையாற்றியதுடன் ஒரு இராணுவத்தில் காலாட்படையின் முக்கியத்துவம் குறித்தும், எதிரிக்கு எதிரான ஒரு போர் சூழ்நிலையில் போர் சவால்களை எதிர்கொள்வதற்கு இதுபோன்ற பயிற்சி எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதையும் பற்றி அவர்களுடன் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். காலாட்படை பயிற்சி மையத்தின் தளபதியவர்கள் காலாட்படை பயிற்சி மையத்தின் பாத்திரங்கள் மற்றும் பணிகள் மற்றும் அதன் சமீபகால முன்னேற்றம் குறித்து இராணுவத் தளபதியிடம் விளக்கினார். அவர் அன்றைய பிரதம அதிதிக்கு நினைவு சின்னத்தினை வழங்கி தனது நன்றியையும் தெரிவித்தார்.

தளபதியவர்கள் வளாகத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்பு காலாட்படை பயிற்சி மையத்தின் அதிதிகள் புத்தகத்தில்சில குறிப்புக்கயும் பதிவிட்டார்.

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சிந்தக கமகே, இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் ஜயசாந்த கமகே, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாயினர் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

1984 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட காலாட்படை பயிற்சி மையமானது இலங்கை இராணுவத்தின் ஒரு பிரிவு ஆகும், இது காலாட்படையில் சேரும் வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் அடிப்படை மற்றும் மேம்பட்ட பயிற்சிக்கு பொறுப்பாகும். இளம் அதிகாரிகளின் பாடநெறி (ஆயுதங்கள்), பட்டாலியன் ஆதரவு ஆயுதப் படிப்பு (அதிகாரிகள்), பட்டாலியன் ஆதரவு ஆயுதப் பாடநெறி (பிற அணிகளில்), சிரேஷ்ட ஆணையிடப்படாத அதிகாரிகளின் தந்திரோபாயப் படிப்பு, ஆணையிடப்படாத அதிகாரிகளின் தந்திரோபாயப் படிப்பு, மோர்டார் படைப்பிரிவு பாடநெறி, நேரடியாக பட்டியலிடப்பட்ட அதிகாரிகளின் பாடநெறி மற்றும் இன்னும் சில பாடநெறிகள் இங்கு நடாத்தப்படுகின்றன. |