ஐசிஆர்சி பிரதிநிதியும் மற்றும் பிரித்தானிய தூதுவர் கூட்டுப்படைத் தளபதியை சந்திப்பு

6th June 2019

பிராந்திய ஆயுதப்படை மற்றும் பாதுகாப்புப் படைகளின் பிரதிநிதியுமான ஓய்வு பெற்ற பிரிகேடியர் ஜகீஸ் லெமே மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேசக் குழு மற்றும் பாதுகாப்புப் படை அதிகாரியான சன்ன ஜெயவர்த்தன ஆகியோர், கூட்டுப்படைப் தளபதி மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே அவர்களை கடந்த மே மாதம் (30) ஆம் திகதி பனாகொடையிலுள்ள அவரது பணிமனையில் உத்தியோகபூர்வமாக சந்தித்தனர்.

இச்சந்திப்பின் போது நாட்டின் தற்போதைய வன்முறை தொடர்பான விடயங்களை கலந்துரையாடினார்கள். அச்சமயத்தில் பிரித்தானிய தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரி கேர்ணல் டேவிட் அஷ்மான் அவர்களும் இணைந்திருந்தார்.

இவரும் நாட்டின் பாதுகாப்பு நிலவரம் தொடர்பான விடயங்களை கூட்டுப்படைத் தளபதியுடன் கலந்துரையாடினார். |