71 ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு அபிசேக பூஜை
4th October 2020
ஒக்டோபர் 10 இராணுவத்தின் 71ஆவது ஆண்டு நிறைவு விழாவிற்கு இணையாக சர்வ மத ஆராதணையின் ஒர் அங்கமாக இந்து மத ஆராதணைகள் கொழும்பு 13 ஶ்ரீ பொன்னம்பலம்வானேஸ்வரம் ஆலயத்தில் விசேட யாகம் அபிஷேகம் ஆராதணை மற்றும் இராணுவ படைகளின் கொடிகளுக்கு ஆசீர்வாதமளித்தல் என்பன 03 ஆம் திகதி மாலை 0500 மணிக்கு நடைப்பெற்றது.
இப் பூஜையில் இராணுவ இந்து சங்கத்தின் தலைவர் இமால் குருகே அவர்களின் அழைப்பை ஏற்று பாதுகாப்பு பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். வண்ணமயமான அலங்காரங்களுடன் பல அந்தணர்களால் பூஜை நிகழ்த்தப்பட்டது.
காண்டா மணி, நாதஸ்வர மேள தாளங்கள் முழங்க மந்திர பாராயணத்துடன் இராணுவ தளபதி இராணுவக் கொடியினை மூல மூர்த்தியின் ஆசீர்வாததிற்காய் பிரதம சிவாச்சாரியாரிடம் கையளித்தார்.
இலங்கை இராணுவ இந்து சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அன்றைய அபிஷேக பூஜையில் இராணுவக் கொடிக்கு ஆசீர்வாதம் அளித்ததுடன் இராணுவத்தில் உள்ள அனைத்து படையினர்களின் நல்வாழ்வு மற்றும் நீண்ட ஆயுளுக்காய் ஆசீர்வாத பிரார்த்தனைகள் இடம்பெற்றன.
ஆலய பிரதம சிவாச்சாரியார் சிவஶ்ரீ சுரேஸ் குருக்களின் தலைமையில் ஆகம விதிகளுக்கிணங்க பத்து பேர் கொண்ட வேத விற்பன்னர்களால் கிரியைகள் நடாத்தப்பட்டன.
இந்து மதத்தில் கடவுளுக்கு பழங்கள், நெய் மற்றும் மாலைகள் போன்றவற்றை வழங்குவதை உள்ளடக்கிய பாரம்பரிய அபிஷேக பூஜை மிகவும் உயர் தெய்வீக சடங்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது, அங்கு தெய்வங்கள் தண்ணீர் மற்றும் மணம் நிறைந்த பொருட்களால் ஊற்றப்படுகின்றன, உண்மையில் இது ஒர் அரிய அம்சத்தை கொண்டுள்ளது.
பூஜையின் நிறைவில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் அமைப்பில் சேவை செய்யும் அனைவரின் சார்பாக கோயிலுக்கு ஒரு தொகை நன்கொடையும் வழங்கினார். புராதன பெருமை மிக்க பழங்கால கோவிலின் பிரதம சிவாச்சாரியார் சிவஶ்ரீ சுரேஸ் குருக்களால் இராணுவத்தினருடன் இணைந்து இப் பூஜையினை உயர்தரத்தில் செய்திருந்தார்.
இப் பூஜையில் பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன, பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் துமிந்த சிரிநாக ,இராணுவ தொண்டர் படையின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரிய, சிரேஷ்ட அதிகாரிகள், இந்து அதிகாரிகள் மற்றும் படையினர் பலரும் இணைந்திருந்தன. |