கோவிட் -19 இற்கு எதிராக தேசிய கடைமைகளில் தொடர்ந்தும் செயற்படும் கடற்படையினர்
11th May 2020
ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான ஊடக சந்திப்பு இன்று மதியம் 11 ஆம் திகதி கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
“மெல்போனில் இருந்து இலங்கைக்கு 274 பேர் நேற்று காலை 10 ஆம் திகதி இலங்கை வந்தடைந்தனர். அதேநேரம் 178 பேர் கொண்ட மற்றைய ஒரு குழுவினர் மலேசியாவில் இருந்து இலங்கைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் இலங்கை வந்தனர் .அவர்கள் அனைவரும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டுள்ளனர். அதேவேளை 479 பேர் கொண்ட மற்றைய ஒரு குழுவினர் இந்தியா,சென்னையில் இருந்து இலங்கைக்கு 12 ஆம் திகதி மாலை வரவுள்ளனர்.
முப்படையினரால் நிர்வகிக்கப்படும் பூனானை (279), இரனைமடு(175) மற்றும் நிபுன(10) ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 279 பேர் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்களுடன் 11 ஆம் திகதி தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.
இதுவரை, 11 ஆம் திகதியுடன் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் மொத்தம் 7391 தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். தற்பொழுது நாடுபூராகவுமுள்ள 39 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 3805 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.
கோவிட்-19 ஒழிப்புப் பணிகளை நடத்துவதில் இருந்து கடற்படை விலகிவிட்டதாக தவறான தகவல்களையும் கதைகளையும் கொண்ட சில வலைத்தளங்கள் குறிப்பிடுகின்றன. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கடற்படையினர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தாலும், மீதமுள்ள தைரியமான கடற்படையினர் இந்த வைரஸை நம் மண்ணிலிருந்து ஒழிக்கும் தேசிய கடமையை இன்னும் தீவிரமாக தொடர்கின்றனர்.
அனைத்து அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களில் கடமைகள் இன்று (11) காலை மீண்டும் தொடங்கப்பட்டன, குறிப்பாக ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு சுகாதார வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது,. அதேபோல், கடந்த சில வாரங்களில், அந்தந்த பணியிடங்களில் உள்ள பணியாளர்கள் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மூலோபாய செயல்பாட்டு விரிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே அனைத்து நிறுவனத் தலைவர்களும் அந்த சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைப்பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமூக இடைவெளியினை வைத்திருக்கும்போதும், சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றும்போதும், வேலைக்கு செல்பவர்கள் அனைவரும் கோவிட்-19 தொற்றுநோய்க்கு ஆளாக மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும், ”என்று லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நினைவுபடுத்தினார்.
சுருக்கம்
தனிமைப்படுத்தப்பட்ட மொத்தம் நபர்கள் -7391
தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள நபர்கள் -3805
தனிமைப்படுத்தல் நிலையங்கள்- 39 |