64 ஆவது படைப் பிரிவினுள் புதிய கேட்போர் கூடம் திறந்து வைப்பு
10th December 2018
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் ஒட்டுசுட்டானில் அமைந்துள்ள 64 ஆவது படைப் பிரவு தலைமையகத்தில் புதிதாக கேட்போர் கூடம் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
64 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர அவர்களது அழைப்பையேற்று முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்கள் வருகை தந்து இந்த கேட்போர் கூடத்தை திறந்து வைத்தார்.
இந்த கேட்போர் கூடம் 250 பேரை உள்ளடக்க கூடிய வசதிகளை கொண்டுள்ளது. மேலும் திறந்து வைப்பு நிகழ்வில் இராணுவ சிரேஷ்ட உயரதிகாரிகளும் இணைந்திருந்தனர். |