700ற்கு மேற்பட்ட இராணுவப் படையினர் 24ஆவது படைப் பிரிவில் இரத்ததான நிகழ்வில் பங்கேற்பு
18th November 2018
அமபாரை பொலன்நறுவை தெஹிஅத்த கண்டிய மஹாஓயா மற்றும் கல்முனை போனற வைத்தியாசலைகளில் காணப்படும் இரத்த தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு 24ஆவது படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் மஹிந்த முதசிங்க அவர்களின் தலைமையில் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியவர்களின் ஆசிகளுடன் 24ஆவது படைத் தலைமையகத்தின் 5ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இப் படைத் தலைமையகத்தில் இரத்ததான நிகழ்வூ ஏற்பாடு செய்யப்பட்டது.
இவ் இரத்ததான நிகழ்வானது அம்பாரை இரத்த வங்கியின் வைத்தியர் ஹன்ச ராமநாயக்க அவர்களின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது கிழக்கு மாகானத்தில் காணப்படும் நோயளர்களுக்கான இரத்ததானத்தை சுய விருப்புடன் அதிகாரிகள் உற்பட 700 படையினர் வழங்கி வைத்தனர். இந் நிகழ்வில் அமபாரை பொலன்நறுவை தெஹிஅத்த கண்டிய மற்றும் மஹாஓயா போன்ற பிரதேசங்களின் 06 வைத்தியர்கள் மற்றும் 44 வைத்திய அதிகாரிகள் போன்றௌர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் 24ஆவது படைத் தலைமையக தளபதி 242ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் தமித் ரணசிங்க 241ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் விபுல சந்திரசிறி மற்றும் 24ஆவது படைத் தலைமையக நிர்வாக அதிகாரியான கேர்ணல் தீபால் ஹதுறுசிங்க மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதன் போது பிரதம அதிதியாக கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சந்துசித்த பனன்வெல அவர்களும் கலந்து கொண்டார்.
இவ் 24ஆவது படைத் தலைமையகத்தில் இரத்ததான நிகழ்வானது 03ஆவது முறையாக இடம் பெற்றது. இதன் போது பொலன்நறுவை அனுராதபுர வைத்தியசாலைகளில் வருகை தந்த வைத்திய அதிகாரிகளுக்கு குளிர் பாணங்கள் போன்றனவூம் வழங்கப்பட்டது.
இவ் இரத்ததான நிகழ்வில் அம்பாரை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் போன்றோர் கலந்து கொண்டனர். |