யாழ் - வசவிலனின் இடம் பெற்ற விசேட காலாட் படை நடவடிக்கைப் பயிற்சிகள்
18th November 2018
யாழ் வசவிலன் பிரதேசத்தில் அமைந்துள்ள விசேட காலாட் படை நடவடிக்கைப் பயிற்சிகளின் பயிற்றுவிப்பு பாடசாலையில் இடம் பெற்ற பயிற்றுவிப்பு பயிற்சிகளில் கலந்து கொண்ட 60அதிகாரிகள் மற்றும் படையினரின் வெளியேற்ற நிகழ்வானது கடந்த வெள்ளிக் கிழமை (16) இடம் பெற்றது.
மேலும் இப் பயிற்சிகள் யாழ் பாதுகாப்பு படைத ;தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியவர்களின் வழிகாட்டலின் கீழ் 09ஆம் திகதி ஒக்டோபர் முதல் 16ஆம் திகதி நவம்பர் 2018வரை இப் பயிற்சிகள் இடம் பெற்றது. இப் பயிற்சிகளில் 52 57 65 மற்றும் 66 படைத் தலைமையகங்கள் மற்றும் 512 மற்றும் 513ஆவது படைப் பிரிவூகளின் படையினரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இப் பயிற்சிகளில் சிறந்த வீரராக 11ஆவது கஜபா படைத் தலைமைய கெப்டன்ட் ருக்மல் குமார மற்றும் 20ஆவது விஜயபாகு காலாட் படையணியின் சாதாரண படைவீரர் ஏ ஆர் சுரங்க சிறந்த துப்பாக்கி சூடுனருக்கான வெற்றியைப் பெற்றார். இதன் போது சிறந்த குழுவாக 65ஆவது படைத் தலைமையகம் தெரிவூ செய்யப்பட்டது. |