கிளிநொச்சி படைத் தளபதி இராணுவ தலைமையக பதவி நிலை பிரதானியாக பதவியேற்பு

8th November 2018

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி பதவியிலிருந்து விடை பெற்றுச் செல்லும் மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவனவிற்கு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக மைதானத்தில் (6) ஆம் திகதி இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் படையினரால் மேற்கொள்ளப்பட்டது.

இவரது அணிவகுப்பு மரியாதையின் பின்பு படைத் தளபதியனால் படையினர் மத்தியில் உரை நிகழ்த்தப்பட்டது.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி கடமை மாற்றத்தின் நிமித்தம் இராணுவ தலைமையக பதவி நிலை பிரதானி பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரது இந்த பதவி மாற்றத்தின் நிமித்தம் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் புதிய படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா அவர்கள் நியமிக்கப்பட்டார்.

இந்த நிகழ்வில் கிளிநொச்சி முன்னரங்க பாதுகாப்பு படைத் தளபதி, 57, 66 ஆவது படைத் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். |