மருதானை மற்றும் வெல்லம்பிடிய பிரதேசத்திலுள்ள 314 பேர்கள் பூனானை தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைப்பு
3rd April 2020
ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான ஊடக சந்திப்பு இன்று (26) சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னியாரச்சி, கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் மருத்துவ நிபுணர் வைத்தியர் அனில் ஜாசிங்க, சட்ட வழக்கறிஞ்சரும், பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோகன ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
இந்த ஊடக சந்திப்பில் இராணுவ தளபதி கருத்து தெரிவிக்கையில் இரண்டு வார கால தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்குப் பின்பு தியதலாவை, ரன்டம்பே, குண்டசாலை, போஹொட, பெரியகாடு மற்றும் தந்திரிமலை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து 09 பௌத்த மதகுருமார்கள் உட்பட 288 பேர் பூரன பரிசீலனைகளின் பின்பு தரமான குணசான்றிதழ்களுடன் இன்று (3) ஆம் திகதி தத்தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அத்துடன் நாடாளவியல் ரீதியாகவுள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து இது வரைக்கும் 2598 பேர் வெளியேறியுள்ளதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.
"அதேபோல், மொத்தம் 314 நபர்கள், கோவிட் –19 தொற்று நோய்க்கு உள்ளாகி இறந்தமூன்றாவது நபரின் பரிசோதனை விசாரனையின் நிமித்தம்பாதிப்புக்கு உட்பட்டிருக்கலாம் எனும் சந்தேசத்தின் பேரில் பூனானை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு இம் மாதம் (2) ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நபர்கள் மருதானை இமமுரல்ரஷ் மாவத்தை, சமபுர தொடர்மாடியில் வசித்து வருபவரும் , மற்றும் வெள்ளம்பிடியில் வசித்து வரும் 12 பேரும் ஆவர் என்று இராணுவ தளபதி சுட்டிக்காட்டினார்.
"கொழும்பு தெற்கு மருத்துவமனையில் கோவிட் -19 வைரஸ் தொற்று நோயாளாரினால் பாதிக்கப்பட்டவர்களான சிகிச்சையளித்த மருத்துவர்கள் மற்றும் தாதி ஊழியர்கள் உட்பட 24 பேர் கொண்ட ஒரு மருத்துவ குழுவானது முன்பு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட மகாரகம ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.ஆனால் பின்னர் அவர்கள் வைக்கலில் உள்ள டொல்பின் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர். டொக்டர்கள் உட்பட மேலும் 25 நீர்கொழும்பு மருத்துவ பணியாளர்கள் குழு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், வைகல் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையங்களில் மொத்த எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, நாடாளவியல் ரீதியாகவுள்ள 40 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில்1741 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மேலும் 155 பேர் கொண்ட குழுவினர் நாளை (4) ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறை முடிந்த தங்களது வீடுகளுக்கு செல்லவுள்ளனர் என்று இராணுவ தளபதி வலியுறுத்தினார்.
"இந்த நாட்டின் மூத்த குடிமக்களாக இருக்கும் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் பெற வசதியாக, நேற்று மற்றும் இன்றைய தினமான கடந்த இரண்டு நாட்களுக்குதங்கள் வீடுகளில் இருந்து தங்கள் வங்கிகளுக்கு அழைத்துச் செல்ல இராணுவத்தினரால் போக்குவரத்து வசதிகள் வழங்கி வைக்கப்பட்டதாக இராணுவ தளபதி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
மேலும் இந்த ஊடக சந்திப்பில் கௌரவத்திற்குரிய சுகாதார அமைச்சர், பொது சுகாதார பணிப்பாளர் நாயகம் மற்றும் பிரதி பொலிஸ் மாஅதிபர் போன்றோர் முன்னேற்ற கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவித்தனர். |