மேற்கு படையினர் ஆணமடுவையில் மழையினால் பாதிக்கப்பட்ட வீதிகளைத் திருத்தல்

3rd October 2018

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 14ஆவது படைப் பிரிவின் 143ஆவது படையணியின் 16ஆவது கஜபா படையினர் ஆணமடுவை மஹாகும்புக்கடவல பிரதேச செயலகத்திற்குற்பட்ட மற்றும் ஆணடுவை பங்கதெனிய பிரதான வீதியானது கடந்த திங்கட் கிழமையன்று (01) மாலைவேளை ஏற்பட்ட மழையின் காரணமாக பாதிப்படைந்து காணப்பட்டது.

அத்துடன் முதலைக்குடா அதிகாமம் வரயகாமம் வல்பளுவை ககுபதியாவை புதுகம (பொலிஸ் கிராமம்) சுரக்குளம் மற்றும் பெரியமடு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளின் வீதிகளில் பாரிய மரங்கள் வீழ்ந்து போக்குவர்த்து தடைப்பட்டிருந்தது. இதன் காரணமாக மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியணகே அவர்கள் படையினரை இப் பணிகளில் ஈடுபடுத்தும் நோக்கில் செயற்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஆணைமடு முதலைக்குலியவில் காலநிலை காரணமாக ஏற்பட்ட இவ் அனர்த்த பாதிப்புகளை சரிசெய்யும் நோக்கில் 16ஆவது கஜபா படைப் பிரிவின் 5 அதிகாரிகள் உள்ளடங்களாக 50 படையினர் செயற்பட்டனர். 143ஆவது படைப் பரிவின் கட்டளை அதிகாரியவர்களின் கண்காணிப்பில் இந் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது. |