24ஆவது படைப் பிரிவினரால் இராணுவ தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஏற்பாடு

3rd October 2018

இராணுவத்தின் 69ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 24ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்களின் பங்களிப்புடன் இப் பிரசேத்தில் உள்ள இக்னேசியஸ் ஆலயத்தில் வழிபாட்டு ஆசீர்வாதப் பிரார்த்தனைகள் கடந்த புதன் கிழமை (3) இடம் பெற்றது.

இவ் வழிபாட்டு நிகழ்வூகளில் 24 படைத் தலைமையகத்;தின் கீழ் இயங்கும் 241ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் டபிள்யூ சந்திரசிறி அவர்களும் கலந்து கொண்டார்.

இவ் இராணுவத்தின் 69ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு இக்னேசியஸ் ஆலயத்தின் பாதிரியார் பிரதீப் ரொஷாந்த மற்றும் சொரிக் கல்முனையின் பெரிஷ் ஆலயத்தின் பாதிரியார் திருச்செல்வம் அவர்கள் வழிபாடுகளை நிகழ்த்தி ஆசிகளை வழங்கினார்.

இவ் வழிபாட்டு ஆராதனை நிகழ்வூகளில் கிட்டத் தட்ட 150 பொது மக்கள் கலந்து கொண்டனர். இதன் போது இராணுவ காலாட் படையணியின் கொடிகளுக்கான ஆசீர்வாதங்கள் வழங்கப்பட்டதோடு சில நாட்களின் பின்னர் பௌத்த இந்து மற்றும் இஸ்லாமிய வழிபாடுகளும் இடம் பெறும். |