வன்னிப் பாதுகாப்பு படையினரின் தலைமையில் சிறுவர் தின நிகழ்வுகள்

3rd October 2018

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஹதென ரடக - வடென லமய் எனும் தலைப்பின் கீழ் சிறுவர் தின நிகழ்வுகள் வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமையகமானது ITN தொலைக்காட்சியுடன் இணைந்து கடந்த ஞாயிற்றுக் கிழமை (30) சம்பத்நுவர மஹாவலி விளையாட்டு மைதானத்தில் 42 பாடசாலைகளில் தேர்தெடுக்கப்பட்ட வெலிஓய முல்லைத்தீவு அனுராதபுர மற்றும் புல்மூட்டை போன்ற பிரதேசங்களில் உள்ள 2500 பாடசாலை மாணவர்களை உள்ளடக்கி இந் நிகழ்வுகள் இடம் பெற்றது.

மேலும் இந் நிகழ்வானது நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் குமுது பெரோ அவர்களின் தலைமையில் பாரிய அளவிலான பெற்றோர் ஆசிரியர்கள் மற்றும் பொது மக்களின் பங்களிப்புடன் இடம் பெற்றது.

இந் நிகழ்வுகளில் பௌத்த இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களை உள்ளடக்கிய கலாச்சார நடனங்கள் மற்றும் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் பல வகையான நிகழ்வுகளும் இங்கு இம் மாணவர்களால் அரங்கேற்றப்பட்டது.

அந்த வகையில் ITN தொலைக் காட்சியானது இவ்வாறு பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான சித்திரப் போட்டிகள் மற்றும் பல நிகழ்வுகளை நுாறு மாணவர்களை உள்ளடக்கி நடாத்தியது. இந் நிகழ்வில் கலந்து கொண்ட மாணர்கள் அனைவருக்கும் பெறுமதி மிக்க பரிசில்கள் போன்றன வழங்கப்பட்டன. மேலும் இந் நிகழ்விற்கான அனுசரனையை சிலோன் பிஸ்கட் லிமிடட் நெல்லே லங்கா மற்றும் கொமர்சியல் வங்கி போன்றன வழங்கி வைத்தது.

இந் நிகழ்வில் வன்னிப் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் 62ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான எல் ஏ என் எஸ் வணிகசிங்க அவர்கள் இந் நிகழ்விற்று படையினரின் ஒத்துழைப்பை வழங்கியதுடன் 623ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் பிரசன்ன குணரத்தின அவர்கள் இதற்கா ஒருங்கிணைப்பை வழங்கினார்.

மேலும் இந் நிகழ்வில் அனுராதபுர மேலதிக மாவட்ட செயலாளரான திரு கீர்த்தி கமகே வெலிஓயா மாவட்ட செயலாளரான திரு தீபால் திரிமான்ன அத்துடன் ITN தொலைக்காட்சியின் தலைமை நிர்வாக அதிகாரியான திரு சந்தன திலகரத்தின 61ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான கே டீ சி ஜெ ஜி திலகரத்தின (வட மத்திய) முன்னரங்க பாதுகாப்பு அதிகாரியான பிரிகேடியர் எச் குலதுங்க வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமையக உயர் அதிகாரிகள் 62ஆவது படைப் பிரிவின் வலயக் கல்வி பணிப்பாளர்கள் உயர் அதிகாரிகள் ITN தொலைக் காட்சியின் அதிகாரிகள் சிலோன் பிஸ்கட் லிமிடட் நெல்லே லங்கா மற்றும் கொமர்சியல் வங்கி பாடாவி ஸ்ரீ புரா வித்தியாலய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் சம்பத் நுவர புல்மூட்டை முல்லைத் தீவூ மற்றும் வெலிஓய மாவட்ட செயலகங்களை உள்ளடக்கி 2018ஆம் ஆண்டிற்கான சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் இடம் பெற்றது. |