முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் நலன்புரி நிலையங்கள் திறந்து வைப்பு
26th September 2018
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தினுள் நலன்புரி நிலையங்கள் (25) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை திறந்து வைக்கப்பட்டன.
இந்த நிலையங்கள் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களினால் சமய சம்பிரதாய ஆசிர்வாதத்துடன் மங்கள விளக்கேற்றி திறந்து வைக்கப்பட்டன. படையினருக்கு பயணளிக்கும் முகமாக தையல் நிலையம், அழகு நிலையம், கடைத் தொகுதிகள் திறந்து வைக்கப்பட்டன.
இத்தருணத்தில் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதியுடன் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் நிர்வாக பிரதானி பிரிகேடியர் டப்ள்யூ.டீ.சி.கே கொஸ்தா அவர்களும் வருகை தந்தார். |