இராணுவ படையணிகளுக்கு இடையில் இடம்பெற்ற கிரிக்கட் இறுதிச் சுற்றுப் போட்டிகள்

11th September 2018

படையணிகளுக்கு இடையிலான் இறுதிச் சுற்று கிரிக்கட் போட்டிகள் பனாகொடை விளையாட்டு மைதானத்தில் (7) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம்பெற்றன.

இந்த நிகழ்விற்கு இராணுவ கிரிக்கட் சங்கத்தின் அழைப்பையேற்று மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்கள் பிரதம அதிதியாக வருகை தந்தார். இவருடன் மாஸ்டர் ஜெனரல் போர்கருவி மற்றும் போர்கருவி படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிமல் விதானகே அவர்களும் வெற்றியாளர்களுக்கு பரிசினை வழங்கி வைத்தார்.

கிரிக்கட் போட்டிகளில் 10 படையணியைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுக் கொண்டனர். இறுதிச் சுற்றுப் போட்டிகள் இலங்கை படைக் கலச் சிறப்பணி மற்றும் இராணுவ போர்கருவி படையணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இடையில் இராணுவ போர் கருவி படையணி திறமையாக விளையாடி வெற்றிகளை சுவீகரித்துக் கொண்டது.

போர் கருவி படையணியானது 47 ஓவர்களுக்கு 232 ஓட்டங்களையும், படைக் கலச் சிறப்பணி 47 ஓவர்களுக்கு 175 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. |