"எங்களை நம்புங்கள், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இடைநிலைகளுக்கான அனைத்து ஒத்துழைப்பையும் நாம் வழங்குவோம்” இராணுவ தளபதி தெரிவிப்பு

13th March 2020

“(விஷேட ஊடக வெளியீடு )

“சமூக வலைத்தலயங்களில் வெளியாகும் போலியான செய்திகள் முற்றிலும் தவறானது ஆகையால் இந்த செய்திகளை நம்ப வேண்டாம். சுகாதார அமைச்சு மற்றும் முப்படையினரால் உத்தியோகபூர்வமாக வெளியிடும் செய்திகளை மற்றும் நம்புங்கங்கள் என்று இம் மாதம் (12) ஆம் திகதி மாலை பொது அறிவிப்பை பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் தெரிவித்தார்.

““இலங்கை இராணுவமானது நாட்டில் ஏற்பட்டிருந்த கொடிய யுத்தத்தை நிறைவு செய்து நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டி பொதுமக்களது முழு நம்பிகையை பெற்றுள்ளது. ஆகையால் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலுள்ளவர்களுக்கான தனிப்பட்ட பிரச்சினைகள் ஏதாவது இருப்பினும் இலங்கை இராணுவத்தினால் செயற்படும் 0113090502 மற்றும் 113 இலக்கங்களை அழுத்தி இந்த தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காணலாம். இலங்கை இராணுவமானது காடுகளில் கடமைகளில் ஈடுபடும் சமயங்களில் பிளாஸ்டிக் போத்தல்களை வெட்டி அதில் நாம் தேனிரை பருகுவோம் இது எமது கடமையின் நிலைப்பாடு என்று இராணுவ தளபதி சுட்டுகாட்டினார்.

“இருந்தபோதும் சமூக வலைத் தலங்களில் வெட்டப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்களில் இராணுவத்தினர் இந்த மையத்திலுள்ள நபர்களுக்கு தேநீர் வழங்குவதாக செய்திகள் வெளியிடப்பட்டு இராணுவத்தின் கௌரவத்தை வீழ்ச்சியடைய சில சதிகாரர்கள் செய்திகளை வெளியிட்டிருந்தனர். ஆகையால் இப்படியான போலியான செய்திகளை இலங்கை இராணுவமானது நிராகரிக்கின்றது. அத்துடன் இந்த தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இடைநிலைகளுக்கான அனைத்து ஒத்துழைப்பையும் இராணுவ வழங்கியுள்ளதுடன் இவர்கள் 12 நாட்கள் இங்கு தங்கியிருந்து சிகிச்சை பரிசோதனைகளின் பின்பு வைரஸ் தொற்று நோயின்றி வீடுகளுக்கு குணமாக செல்ல வேண்டுமென்று நாம் பிறார்த்திக்கின்றோம்.

“மேன்மை தங்கிய ஜனாதிபதியின் பரிந்துரைப்பின் கீழ் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை நாம் நிர்வாகித்து வருகின்றோம். ஆகையினால் இந்த நிலையங்களில் உங்களுக்கு அநீதியான முறையில் இடையூறுகள் ஏற்பட்டால் இராணுவத்திற்கு தெரிவிக்கவும் இதற்கான சுமூகமான தீர்வுகள் எம்மால் வழங்க முடியும் இலங்கையிலுள்ள 22 மில்லியன் மக்களை பாதுகாப்பது எமது கடமையாகும். எமது நாட்டில் உள்ள அனைவரும் வைரஸ் தொற்று நோயாளிகள் அல்ல சிலரை இனங்கண்டு அவர்களுக்கு சிகிச்சைகளை வழங்கி வருகின்றோம் என்று இராணுவ தளபதி சுட்டிக்காட்டினார். எமது நாட்டில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களான மன்சரிவு, வெள்ளப் பேரழிவுகளின் போது எமது பாதுகாப்பு படையினர் முன்னின்று இந்த பணிகளை மேற்கொண்டு மத்திய அனர்த்த முகாம்களை அமைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று நாட்டு மக்களாகிய நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அத்துடன் கோவிட் – 19 வைரஸ் தொற்றுநோய் பரிசோதனை தனிமைப்படுத்தப்பட்ட மையம் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நாம் அமைத்துள்ளோம். என்று இராணுவ தளபதி வலியுறுத்தினார். (நிறைவு) |