51ஆவது படைப் பிரிவினரால் இடம் பெற்ற இரத்ததான நிகழ்வுகள்
17th August 2018
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் கோப்பாய் பிரதேசத்தில் அமைந்துள்ள 51ஆவது படைப் பிரிவினரின் 60ற்கும் மேற்பட்ட இராணுவப் படையினரால் இப் படைப் பிரிவின் 23ஆவது ஆரம்ப நிகழ்வையொட்டி வடக்கில் காணப்படும் நோயார்களுக்கு இரத்தானம் வழங்கும் நிகழ்வானது கடந்த வெள்ளிக் கிழமை (17) ஏற்பாடு செய்யப்பட்டது.
இவ் இரத்தான நிகழ்வானது 51ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் ரொஷான் செனெவிரத்ன அவர்களின் தலைமையில் (ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி ) இப் படையணி ஆரம்ப தினத்தையொட்டி இடம் பெற்ற இவ் இரத்தான நிகழ்வானது இதுவே முதற்தடவையாக இடம் பெற்றுள்ளதாகும்.
இவ் இரத்தான நிகழ்வானது யாழ் வைத்திய அதிகாரிகள் மற்றும் தாதியர்களின் பங்களிப்போடு இனிதே இடம் பெற்று நிறைவுற்றது. |