பனாகொடையில் இடம் பெற்ற இறுதி நீச்சல் மற்றும் வோட்டர் போலோ போட்டி

29th January 2020

படையணிகளுக்கு இடையில் இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட 2019 ஆம் ஆண்டிற்கான நீச்சல் போட்டி மற்றும் வோட்டர் போலோ சம்பியன்சிப் போட்டியின் இறுதி மற்றும் சான்றிதல் வழங்கும் நிகழ்வானது பனாகொடை இராணுவ நீச்சல் தடாகத்தில் இம் மாதம் (29) ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதான அதிதியாக பதில் பாதுகாப்பு தலைமை அதிகாரியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்விற்கு வருகை தந்த இராணுவ தளபதி அவர்கள், இராணுவ நீச்சல் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் பிரசன்ன சந்ரசேகர உட்பட இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளால் வரவேற்கப்பட்டார்.

4 பிரிவுகளின் கீழ் நடை பெற்ற இப்போட்டியில், 15 படையணிகள் மற்றும் 3 பட்டாலியன்களைச் சேர்ந்த 246 நீச்சல் வீரர்கள் போட்டியிட்டனர், இதில் இராணுவ மகளிர் (தொண்டர்) படையணிகள் மற்றும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியியைச் சேர்ந்த ஒரு அணியினர் 44 தங்க பதக்கங்களை சுவிகரித்துக்கொண்டனர். இப் போட்டியானது இம் மாதம் 24-29 ஆம் திகதி வரை 4 நாள் வரை இடம்பெற்றது என்பது குறிப்பிட தக்க விடயமாகும்.

இவ் வருடம் நீச்சல் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை மின்சார மற்றும் பொறிமுறை இயந்திர படையணி மற்றும் இலங்கை படைகலச் சிறப்பணிகளானது பதிய சம்பியன்களால் தெரிவுசெய்யப்பட்டது.

இதேபோல்,வோட்டர் பொலோ நோவிசஸ் ’ஆண்களுக்கான சம்பியன்ஷிப் போட்டியில் கஜபா படையணி வெற்றிபெற்றதுடன், ஆண்களுக்கான திறந்த வோட்டர் பொலோ சம்பியன்ஷிப்பை இலங்கை பொறியியலாளர் படையணி வென்றனர்.

அதேவேளை, மகளிர் படையணிகளுக்கு இடையிலான நீச்சல் போட்டியில் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் நீச்சல் வீராங்கனைகள் சம்பியன்ஷிப்பை சுவிகரித்துக் கொண்டதுடன், மகளிர்களுக்கான திறந்த நீச்சல் சம்பியன்ஷிப் போட்டியில் 1 ஆவது இராணுவ மகளிர் படையணி வெற்றி பெற்றனர்.

சிறந்த மகளிர் நீச்சல் வீராங்கனையாக இலங்கை இராணுவ பொலிஸ் படையணியைச் சேர்ந்த சாதாரன வீராங்கனை எல். ராஜகருணவும், ஆண்களுக்கான சிறந்த நீச்சல் வீரராக இலங்கை இராணுவ சேவை படையணியை சேர்ந்த சாதாரன வீரர் எம்.குமார அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதி அவர்களால் வெற்றி பெற்ற வீர வீராங்கனைகளுக்கு வெற்றி கிண்ணங்கள் வழங்கப்பட்டன.

இப்போட்டியை நடாத்துவதற்கான பிரதான நடுவர், நடுவர்கள், ஆரம்பிப்பாளர்கள் மற்றும், நடுவர்கள் ஆகியோரை இலங்கை இராணுவ நீச்சல் விளையாட்டுக் கழகமானது வழங்கியது.

இலங்கை இராணுவ நீச்சல் விளையாட்டுக் கழகத்தின் பிரதி தலைவர் கேணல் கிளிபோட் டி சொய்சா அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

இப் போட்டியின் இறுதி நிகழ்வில் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் பலர் கலந்துகொண்டனர். |