அனைத்து மதகுரு தலைவர்களின் பங்களிப்புடன் இடம்பெற்ற ஒன்றுகூடல் நிகழ்வு
10th July 2018
இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் மற்றும பௌத்த மதகுருமார்கள் 30 பேரது பங்களிப்புடன் 65 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டுடன் ஒன்று கூடல் நிகழ்வு (4) ஆம் திகதி புதன் கிழமை இடம்பெற்றன.
இந்த ஒன்று கூடல் நிகழ்வு துனுக்காய் ஆளங்குளத்தில் அமைந்துள்ள 65 ஆவது படைத் தலைமையக வளாகத்தினுள் இடம்பெற்றன. 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார பீரிஸ் , படைத் தலைமையகத்தின் படைத் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் சிவில் ஒருங்கணைப்பு அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். |