புதிய படைத் தளபதியாக நியமிப்பு

10th July 2018

மன்னாரில் அமைந்துள்ள 54 ஆவது படைப் பிரிவிற்கு புதிய படைத் தளபதியாக பிரிகேடியர் செனரத் யாபா அவர்கள் (6) ஆம் திகதி வெள்ளிக் கிழமை நியமிக்கப்பட்டார்.

இப் படைப் பிரிவிற்கு 7 ஆவது படைத் தளபதியாக நியமிக்கப்பட்டு வருகை தந்த இப் படைத் தளபதியை இராணுவ சம்பிரதாயமுறைப்படி அணி வகுப்பு வழங்கி மரியாதை செலுத்தி வரவேற்றனர்.

பின்னர் படைத் தளபதி சமய ஆசிர்வாத பூஜை நிறைவின் பின்பு உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டு தனது கடமையை பொறுப்பேற்றார். அதனை தொடர்ந்து தலைமையக வளாகத்தினுள் படைத் தளபதியினால் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றன.

இந்த நிகழ்விற்கு இப் பிரதேசத்திலுள்ள அனைத்து படைத் தலைமையக தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். |