இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் விகாரைகள் சீரமைப்பு மற்றும் புனரமைப்பு

3rd July 2018

மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு கீழ் உள்ள 12 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 122 ஆவது படைத் தலைமையகத்தின் படையினரது பங்களிப்புடன் பண்டையகால விகாரையான திஸ்சமஹாராமா உத்தகந்தரா ராஜா மகா விகாரை சீரமைப்பு மற்றும் புனரமைப்பு மேன்மை தங்கிய சனாதிபதியின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஆரம்ப விழாவிற்கு ஶ்ரீ ரேவத பிரதான சங்கநாயக ருகுனு மஹம்பதுவ மல்வத்தே அவர்களது அழைப்பையேற்று மதிப்புக்குரிய தெனகம தம்மாதஸ்சி தேரர் அவர்கள் வருகை தந்தார். இந்த நிகழ்வு (30) ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றன.

இந்த பணிகள் 12 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க வன்னியாரச்சி அவர்களின் தலைமையில் ஒரு மாத காலமாக இடம்பெற்றன. |