பத்தரமுல்லையில் அமைந்துள்ள இந்திய இராணுவ நினைவு தூபிகளுக்கு அஞ்சலி

14th May 2018

இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்ட இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் பிபின் ராவ்ட் மே மாதம் 13 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரையிலான நாட்களுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

அச் சமயத்தில் பத்தரமுல்லையில் அமைந்துள்ள இந்திய சமாதா படையணியின் நினைவு தூபிக்கு (14) ஆம் திகதி காலை விஜயத்தை மேற்கொண்டார்.

அப்போது இவரை இலங்கை இராணுவத்தின் பிரதி பதவி நிலை பிரதானியான மேஜர் ஜெனரல் காரியகரவன அவர்கள் வரவேற்றார். பின்பு இலங்கை இராணுவ பொலிஸ் படையணியினால் இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் நினைவு தூபிக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்பு இந்திய இராணுவ பிரதானியினால் இந்த நினைவு தூபிக்கு கௌரவ அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த இராணுவ அதிகாரிகள், இராணுவ பொலிஸ் படையணியைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகள் படை வீர்ர்கள் கலந்து கொண்டனர்.

|