மூதூர் பிரதேசத்தில் கிரிக்கட் சுற்றுப் போட்டிகள்
8th May 2018
கிரிக்கட் சுற்றுப் போட்டிகள் கிண்ணியா பொது விளையாட்டு மைதானத்தில் 28 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றன.
இந்தப் போட்டியில் மூதுரைச் சேர்ந்த 39 விளையாட்டு கழகங்கள் பங்கு பற்றின. 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்களது எண்ணக் கருவிற்கமைய 224 ஆவது படைத் தலைமையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றன.
இந்த இறுதிச் சுற்றுப்போட்டிகள் கிண்ணியா மற்றும் மூதூர் கழகங்களுக்கு இடையில் இடம்பெற்ற இடையில் கிண்ணியா கழகத்தினர் வெற்றியை சுவீகரித்துக் கொண்டனர்.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக 22 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்கள் வருகை தந்து பரிசுகளையும் வழங்கிவைத்தார். மேலும் 224 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியான கேர்ணல் பி எதிரிவீர அவர்களும் வருகை தந்தார்.
|