பொதுநலவாய விளையாட்டின் குத்துச் சண்டை இராணுவ வீரர் லார்ஸ் கோப்ரல் பண்டார அவர்களின் சாதனைக்காக இராணுவ உதவிகள்

24th April 2018

இலங்கை இராணுவத்தில் ஆரம்பிக்கப்பட்ட குத்துச்சண்டை போட்டியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பொறியியளாலர் சேவை படையணியின் லார்ஸ்ட் கோப்ரல் இஷான் பண்டார அவர்கள், இராணுவத்திட்கும் தமது நாட்டிற்கும் கௌரவத்தை பெற்றுக் கொடுத்துள்ளதுடன் அவுஸ்ரேலியா கோல்ட் கோஸ்ட் நகரில் இடம் பெற்ற பொதுநலவாய -2018 க்கான விளையாட்டு 52 எடையின் கீழ் நடைப் பெற்ற குத்துச்சண்டை இறுதி சுற்றுப் போட்டியில் வெற்றிப் பெற்று வென்கலப் பதக்கத்தை பெற்றுக் கொண்டார்.

தனது வெற்றிக்கு மில்லியன் கணக்கில் செலவு செய்த இராணுவத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய இலங்கை இராணுவ குத்துச் சண்டை விளையாட்டு கழகத்தின் அதிகாரி மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களுக்கும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததுடன் பயிற்ச்சி வழங்கிய இராணுவ குத்துச் சண்டை பயிற்ச்சியாளரான ஆணைச்சீட்டு அதிகாரியான சம்பத் ஜயதிலக்க அவர்களுக்கும் தனது நன்றியை தெரிவத்துக் கொண்டார்.

லார்ஸ்ட் கோப்ரல் இஷான் பண்டார அவர்கள் அவுஸ்ரேலியா கோல்ட் கோஸ்ட் நகரில் இடம் பெற்ற பொதுநலவாய விளையாட்டு போட்டி இறுதியில் இந்தியா விளையாட்டு வீரருடன் போட்டியிட்டு வெற்றி பெற்ற திறமையான வீரராவார்.

இலங்கை இராணுவ குத்துச் சண்டை விளையாட்டு கழகத்தின் அதிகாரி மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்கள் இராணுவ குத்துச் சண்டை வீரர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததுடன் இராணுவ தளபதியவர்களின் ஆசிர்வாதத்துடன் 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இந்த இராணுவ குத்துச் சண்டை விளையாட்டு வீரர்களுக்கு பயிற்ச்சி வழங்குவதற்காக 3 மில்லியனுக்கு அதிகமாக வழங்கியுள்ளதுடன் இவர்கள் உஸ்பெகிஸ்தான், நெதர்லாந்து, உக்ரைன், கசகஸ்தான், போலந்து மற்றும் பின்லாந்து போன்ற வெளிநாடுகளில் இவர்களுக்கு விஷேட பயிற்ச்சிகளும் வழங்கப்பட்டனர்.

அந்த வகையில் இராணுவ குத்துச் சண்டை பயிற்ச்சியாளரான ஆணைச்சீட்டு அதிகாரி சம்பத் ஜயதிலக்க அவர்களால் லார்ஸ்ட் கோப்ரல் பண்டார அவருக்கு சர்வதேச குத்துச் சண்டை போட்டிகளில் கலந்து கொள்ள தேவையான முதற்கட்ட பயிற்ச்சி வழங்கப்பட்டது அத்துடன் இவரின் பயிற்ச்சிக்கு நேரத்தை ஒதுக்குவதற்கு இலங்கை இராணுவ பொறியியளாலர் சேவை படையணியின் தளபதிக்கும் தனது மனபுர்வமான நன்றியை தெரிவித்துக் கொண்டதுடன் அவரது சகோதரர் மற்றும் அவரது குடும்பத்தினரால் வழங்கப்பட்ட ஆதரவையும் நினைவு கூர்ந்தார்.

லார்ஸ்ட் கோப்ரல் இஷான் பண்டார அவர்களின் தொடர்ச்சியாக பெற்ற வெற்றிக்கு இராணுவ தளபதிக்கும் நன்றி தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்திற்கு பெறுமையையும் சர்வதேச மட்டத்தில் கொண்டு சென்று முதல் தடவையாக வெண்கலப் பதக்கம் வென்ற குத்துச் சண்டை வீரரான லார்ஸ்ட் கோப்ரல் இஷான் பண்டார அவர்களின் திறமையை பாராட்டுவதற்கு ஒரு விழாவும் நடத்தப்படவுள்ளது.

|