மலர்ந்த புத்தாண்டை முன்னிட்டு இராணுவ தலைமையகத்தில் தேநீர் விருந்துபசாரம்

21st April 2018

இத் தேநீர் விருந்துபசாரமானது சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை சிறப்பிக்கும் முகமாக இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களின் எண்ணக்கருவிற்கமைய அனைவரும் ஒன்றிணைந்து (20) ஆம் திகதி வெள்ளிக் கிழமை காலை வேளையில் இராணுவ படைத் தலைமையகத்தில் கொண்டாடப்பட்டது.

இத் தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவ தளபதியவர்களை இராணுவ பதவி நிலை பிரதாணி, துணை பதவி நிலை பிரதாணி,நிர்வாக பதவி நிலை பிரதாணி அவர்களால் வரவேற்கப்பட்டு அழைத்து செல்லப்பட்டார்.

அத்துடன் இராணுவ தளபதியுடன், துணை பதவி நிலை பிரதாணி, மற்றும் நிர்வாக பதவி நிலை பிரதாணிகள், இணைந்து மங்கள விளக்கேற்றி பால்சோறு,பலகாரம், கொக்கிஸ் போன்ற பல வகையான பலகாரங்களுடன் இத் தேநீர் விருந்து சிறப்பாக காணப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இத் தேநீர் விருந்தில் கலந்து கொண்ட இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்கள் ஒரு மணித்தியாலங்களுக்கு பின் அனைத்து படையினர்களுடன் பயிற்சி நலன்புரி மற்றும் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் அவர்களிடன் நட்பாகப் கலந்துரையாடினார்.

|