56 ஆவது படைப் பிரிவுக்கு புதிய தளபதி பதவியேற்பு
19th April 2018
கிளி நொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 56 ஆவது படைப் பரிவுக்கு புதிய கட்டளை தளபதியாக பிரிகேடியர் பிரபாத் தெமடபிடிய அவர்கள் (18) ஆம் திகதி புதன் கிழமை இப் படைத் தலைமையக இராணுவ சம்பிரதாயத்துடன் உத்தியோகபூர்வ பதவி பொறுப்பேற்றார்.
அதனைத் தொடர்ந்து இப் புதிய கட்டளை தளபதிக்கு இராணுவ சம்பிரதாயத்துடன் மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டதுடன் இப் படைத் தலைமையக சிரேஷ்ட அதிகாரிகளினால் அழைத்து செல்லப்பட்டார் .
புதிய கட்டளை தளபதியான பிரிகேடியர் பிரபாத் தெமடபிடிய அவர்கள் உத்யோக பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டபின் அவர் தனது அலுவலக கடமையை பொறுப்பேற்றார்.
பின் இவ் வளாகத்தில் மரக் கன்றொன்றும் இப் புதிய கட்டளை தளபதியவர்களால் நடப்பட்டதை தொடர்ந்து அனைத்து படையினர்களுடன் தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டார் இந் நிகழ்வில் படைத் தளபதிகள் கட்டளை தளபதிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.
|