66 ஆவது படைப் பிரிவிலிருந்து விடைபெற்றுச் செல்லும் படைத் தளபதி

16th April 2018

66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலான அவர்கள் செவ்வாய்க் கிழமை (10) ஆம் திகதி இராணுவ தலைமையகத்திற்கு இடமாற்றத்தையிட்டு படைத் தலைமையகத்திலிருந்து விடைபெற்றுச் செல்கின்றார்.

இரண்டு வருட காலமாக பூநகிரியில் அமைந்துள்ள 66 ஆவது படைப் பிரிவில் படைத் தளபதியாக கடமை வகித்தார்.

விடைப் பெற்றுச் செல்லும் படைத் தளபதிக்கு 20 ஆவது இலேசாயுத காலாட் படையணியினால் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து படைத் தளபதியினால் படையினருக்கு உரை நிகழ்த்தப்பட்டன.

பின்பு படைத் தளபதி அனைத்து இராணுவத்தினரது பங்கேற்புடன் இரவு விருந்தோம்பல் நிகழ்வில் கலந்து கொண்டார். இந்த நிகழ்விற்கு அனைத்து படைத் தலைமையக கட்டளை அதிகாரிகள், படையனியின் கட்டளை அதிகாரிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.

|