பொலன்நறுவைப் பிரதேசத்தில் தேவையுள்ள மக்களுக்காக இராணுவத்தினரால் வீடுகள் வழங்கிவைப்பு
5th April 2018
பொலன்நறுவைப் பிரதேசத்தில்; குறைந்த வருமானத்தைப் பெறும் குடும்பத்தைச் சேர்ந்த மக்களுக்காக ஜனாதிபதிச் செயலகத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற ரஜரட்ட நவோதைய எனும் மாவட்ட அபிவிருத்தி திட்டத்தின் பிபிதெமு பொலன்நறுவை எனும் திட்டத்தின் கீழ் வறிய குடும்பத்தைச் சேர்ந்த திரு டபிள்யூ சரத் குமார அவர்களுக்கு புதிய வீடு அமைத்து வழங்கப்பட்டது.
பொலன்நறுவை மாவட்ட செயலாளர் அவர்களால் கடந்த வியாழக் கிழமை (29) பொலன்நறுவை மாவட்ட செயலக வளாகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
அந்த வகையில் 12ஆவது பொறியியலாளர் சேவைப் படையணியினர் பிபிதெமு பொலன்நறுவை எனும் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் ருபா 499 907 பெறுமதியிலான இப் புதிய வீட்டை நிர்மானித்து சுமார் ஒருமாத காலப்பகுதிக்குள் வழங்கினர்.
மேலும் ஜனாதிபதிச் செலயகத்தின் கண்காணிப்பின் கீழ் இடம் பெற்ற இப் பிபிதெமு பொலன்நறுவை திட்டமானது இவ் வருடம் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டு அன்றய மாதமே இறுதியில் முடிவுற்றது.
இந் நிகழ்வில் பிபிதெமு பொலன்நறுவை எனும் திட்டத்தின் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க (ஓய்வு) மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் போன்றோர் கலந்து செயலக அதிகாரிகள் போன்றௌர் கலந்து கொண்டனர்.
|