வற்றாப்பளை கோயில் வளாகத்திர் இராணுவத்தினர் சிரமதான பணிகள்

2nd April 2018

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 59 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில் வளாகத்தில் சிரமதான பணிகள் மார்ச் மாதம் 22 ஆம் திகதியிலிருந்து 25 ஆம் திகதி வரை இடம்பெற்றன.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களது எண்ணக் கருவிற்கமைய 59 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ருவன் வனிகசூரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் இந்த சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சிரமதான பணிகளில் ஒரு இராணுவ அதிகாரி உட்பட 100 படை வீரர்களது பங்களிப்புடன் இடம்பெற்றன.

|